For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓ! இதுவேறயா... மலேசியா அதிகாரிகளுடன் ஆலோசித்து தேர்தல் அறிக்கை தயாரித்தோம்: விஜயகாந்த் விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிகவின் தேர்தல் அறிக்கை மலேசியா அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி தயாரிக்கப்பட்டது என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

தேமுதிக வெளியிட்ட தேர்தல் அறிக்கை அபத்த குப்பைகளைக் கொண்டதாக இருந்தது. இதனை நேற்று நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் "அபத்த களஞ்சியமான தேமுதிகவின் தேர்தல் அறிக்கை" என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி கட்டுரையாக விவரித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பதிவிட்டுள்ளதாவது:

நன்றி...நன்றி...

நன்றி...நன்றி...

எங்களது தேர்தல் அறிக்கையின் இரண்டு பகுதிகளையும் பலர் பாராட்டினர். சிலர் விமர்சனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலேசியாவில் ஆலோசனை

மலேசியாவில் ஆலோசனை

மலேசியாவில் உள்ள உயர்மட்ட அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி மிகவும் கவனமாகத் தயாரிக்கப்பட்ட திட்டங்கள் இவை. அந்த நாட்டில் நடைமுறையில் உள்ளன.

சத்துணவு திட்டம்

சத்துணவு திட்டம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கியபோது பலர் இதைத் தொடர்ந்து நடத்த முடியாது என்றனர். (அப்போது தமிழக அரசின் வரவு செலவு ரூ. 800+ கோடி. அதில் சத்துணவுக்குச் செலவிட்டது ரூ. 173 கோடி.)

சாத்தியமே

சாத்தியமே

மலேசியா 2 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. இந்தத் திட்டங்களை அவர்களால் செய்ய முடியும் என்றால் நம் தமிழகத்தில் நம்மால் ஏன் செய்யமுடியாது. மக்களின் ஒத்துழைப்புடனும், தெய்வ அருளுடனும் இந்தத் திட்டங்களை நாம் முழுமையாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவோம்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஓ!மலேசியா...

English summary
DMDK leader Vijayakanth said his party election manifesto was prepared after the discussion with Malaysian officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X