For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா உடலுக்கு விஜயகாந்த், பிரேமலதா அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா உடலுக்கு மலர்வளையம் வைத்து விஜயகாந்த்,பிரேமலதா மற்றும் சுதீஷ் அஞ்சலி செலுத்தினர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை நள்ளிரவு காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

காலை முதலே லட்சக்கணக்கான தொண்டர்களும், தமிழக மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக அரசியலில் தேமுதிக என்ற கட்சியை 2005 ம் ஆண்டு தொடங்கிய விஜயகாந்த், கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து எதிர்கட்சித் தலைவரானார். சில மாதங்களிலேயே கூட்டணி முறிந்தது.

Vijayakanth pays respect to Jayalalithaa

அதன் பிறகு ஜெயலலிதா உடன் மோதல் போக்கையே கடை பிடித்தார் விஜயகாந்த். கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆளுங்கட்சியான அதிமுகவை விமர்சித்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, நேரில் பார்க்க அனுமதித்தால் மருத்துவமனைக்கு செல்வேன் என்று கூறினார். இந்த நிலையில் ஜெயலலிதா நேற்று காலமானதை அடுத்து இரங்கல் தெரிவித்திருந்தார் விஜயகாந்த். இன்று அவரது உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் பிரேமலதா, இளைஞரணி தலைவி சுதீஷ் ஆகியோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் அஞ்சலி செலுத்திய பின்னர், அதிமுக தொண்டர்களைப் பார்த்து கரம் கூப்பி வணங்கினார். பின்னர் விஜயகாந்தை பிரேமலதாவும், சுதீசும் கை தாங்கலாக அழைத்துச் சென்றனர்.

English summary
DMDK leader Vijayakanth, Premalatha and Suthish have paid tribute to Tamil Nadu Chief Minister J.Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X