என் மகன் படத்திற்கு பேனர் வைத்தால் கட்சியை விட்டே தூக்கி விடுவேன்: கேப்டன் 'வார்னிங்'
நடிக்கும் படத்திற்கு ஓசியில் விளம்பரம் கிடைக்காதா என்று பலரும் ஏங்கும் நேரத்தில், என் மகன் நடிக்கும் திரைப்படத்திற்கு, கட்சி நிர்வாகிகள் யாராவது பேனர், ஃப்ளக்ஸ் போர்டு வைத்தால், அவர்களை கட்சியை விட்டே தூக்கி விடுவேன் என்று தேமுதிக விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் கேப்டன் என்ற அடைமொழியோடு அடைக்கப்படும் விஜயகாந்த் முழுநேர அரசியல்வாதியாக மாறிய பின்னர் சினிமாவில் நடிக்கவில்லை.
கடைசியாக அவர் நடித்த சில படங்கள் வந்த வேகத்தில் சுருண்டு போனது. இதனையடுத்து சினிமாவில் இருந்து ரிட்டையர் ஆன கையோடு முழு நேர அரசியல்வாதியாகிவிட்டார். ஆனாலும் மகனின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம்

சினிமா வாரிசு
அரசியல்வாதியாக இருந்தாலும் சினிமாவில் தனது வாரிசை களமிறக்கியுள்ளார். விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன், 'சகாப்தம்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

ஏப்ரலில் ரிலீஸ்
சகாப்தம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

விளம்பர பேனர்கள்
வழக்கமாக, விஜயகாந்த் நடிக்கும் படங்களுக்கு, அக்கட்சியினர் பேனர் வைத்து அசத்துவார்கள். கட்சி தலைமை உத்தரவின்படி மட்டுமின்றி, ஆர்வத்தின் அடிப்படையிலும், நிர்வாகிகள் விளம்பர பேனர்கள் வைப்பார்கள்.

ஓவர் விளம்பரம் வேண்டாம்
அதேசமயம் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படத்திற்கு, கட்சியினர் யாரும் பேனர் வைக்கக் கூடாது என, விஜயகாந்த் விரும்புவதாக தெரிகிறது.
கட்சியினர் பேனர் வைத்தால், பொதுமக்கள், நடுநிலையாளர்கள் மத்தியில், படத்திற்கான செல்வாக்கு குறைந்து விடும் எனவும் விஜயகாந்த் கருதுகிறாராம்.

விஜயகாந்த் அறிவுறுத்தல்
அதிக ஆடம்பரத்தோடு அறிமுகப்படுத்தினால் அரசியல் ரீதியாக படத்திற்கு பல நெருக்கடிகள் ஏற்படும் எனவும், தியேட்டர்கள் கிடைக்காது எனவும், விஜயகாந்த் நினைப்பதாக தெரிகிறது. எனவே, கட்சியினர் பேனர் வைக்க வேண்டாம் என, ஏற்கனவே இரு முறை விஜயகாந்த் அறிவுறுத்தி இருந்தார்.

கேட்காத கட்சியினர்
விஜயகாந்தின் உத்தரவுக்கு பிறகும், கட்சி நிர்வாகிகள் சிலர், சமூக வலைதளங்களிலும், பொது இடங்களிலும், இப்படத்திற்கு விளம்பரம் செய்து வருகின்றனர். கட்சிக்காரர்களின் இந்தச்செயல் விஜயகாந்திற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் என்ன?
விஜயகாந்த் நடித்த பல படங்களுக்கு பேனர் வைத்ததால், பொதுமக்கள் மத்தியில் அவை வரவேற்பை பெறவில்லை. எனவே மகனின் படத்திற்கான வரவேற்பை குறைப்பதற்காக, வேண்டுமென்றே இவ்வாறு செய்யப்படுகிறதா என்ற எண்ணமும், தற்போது விஜயகாந்திற்கு ஏற்பட்டுள்ளது.

தோத்துற கூடாது
ஓவர் விளம்பரத்தால் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கூட வெற்றி பெறவில்லை. அதே நிலை தன் மகன் நடிக்கும் படத்திற்கு ஏற்படக் கூடாது என்பதில், விஜயகாந்த் எச்சரிக்கையாக இருக்கிறார்.

கண்டு கொள்ளாத கட்சியினர்
விஜயகாந்த் பலமுறை சொல்லியும், கட்சி நிர்வாகிகள் சிலர், அதை கண்டு கொள்ளாமல், படம் தொடர்பாக விளம்பரம் செய்து வருகின்றனர்.

நீக்கிடுவேன் நீக்கி
எனவே, 'கட்சி நிர்வாகிகள் யாராவது, படத்திற்கு விளம்பரம் வைத்தால், அவர்களை கட்சியை விட்டே நீக்கி விடுவேன்' என, இறுதி எச்சரிக்கையை விஜயகாந்த் பிறப்பித்துள்ளார். மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மூலம், அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் இத்தகவல் அனுப்பப்பட்டுள்ளதாம்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications