ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. இன்னும் 4 நாளில் வேட்பு மனு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் தான் அவர் லோக்சபா தேர்தல் பிரச்சார நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆன அவர், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலினின் திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி மரணமடைந்தார்.
திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதிக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் அதாவது அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். வரும் ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 14 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். ஜூன் 21 ஆம் தேதி தாக்கல் செய்ய இறுதி நாள். ஜூன் 24 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 கடைசி நாள். ஜூலை 10 ஆம் தேதி வாக்குப்பதி நடைபெறும், ஜூலை 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications