காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ரூ.1000 அபராதம்.. ஆக்ஷன் எடுத்த போக்குவரத்து போலீசார்!
கன்னியாகுமரி: விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்டுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர். பேரணியில் ஹெல்மெட் இன்றி பைக் ஓட்டியதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் கடந்த 20 ஆம் தேதி ராஜீவ்காந்தி நினைவு தின ஊர்வலம் காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் சந்திப்பில் இருந்து குழித்துறை சந்திப்பிற்கு கடந்த 20 ஆம் தேதி மாலை ராஜீவ்காந்தி நினைவு தின ஊர்வலம் நடைபெற்றது.

இதில் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார், விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பர்ட் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பர்ட் மற்றும் சிலர் இருசக்கர வாகனத்தில் காங்கிரஸ் கொடியுடன் தலைக்கவசம் அணியாமல் ஊர்வலத்தில் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து தாரகை கத்பர்ட் உட்பட ஹெல்மட் அணியாதவர்கள் மீது போலீசார் தலா ரூ.1000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏவிற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications