"ம்மா.. வலிக்குதும்மா.. முடியல... தலையில் ஊசியை குத்தி துணி தைப்பது போல தைத்த துப்புரவு பெண்!
தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்துள்ளார் துப்புரவு பெண் ஒருவர்
Recommended Video
மன்னார்குடி: "ம்மா.. வலிக்குதும்மா.. என்னால முடியல..." என்று இளம் பெண் கதறும் குரல் நெஞ்சில் இடியாய் விழ... துணி தைப்பது போல படுகேஷூவலாக அந்த பெண்ணின் தலையில் ஊசியை குத்தி, தையல் போடுகிறார் துப்புரவு பெண் ஒருவர்! கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில்தான் இந்த கூத்து நடந்துள்ளது!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இங்கு போதுமான டாக்டர்கள், நர்ஸ்கள், அட்டண்டர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அதனால், இங்கு இருக்கிற நர்ஸ்களே எல்லாவிதமான மருத்துவத்தை பார்ப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் கொடுமை, ஆஸ்பத்திரியை பெருக்கி சுத்தம் செய்யும் துப்புரவு பெண்கூட ட்ரீட்மெண்ட் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துப்புரவு பெண்
இப்படி ஒரு வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. 2 நாளைக்கு முன்னாடி, ஒரு இளம்பெண்ணுக்கு முன்தலையில் அடிபட்டது. அதனால் அவசரத்துக்கு இந்த ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்துவிட்டார். வழக்கம்போல், டாக்டர் இல்லை. நர்ஸ் மட்டும் இருந்திருக்கிறார். அந்த நர்ஸோ, பக்கத்தில் நின்று கொண்டிருந்த துப்புரவு பெண் பணியாளரிடம் பெண்ணுக்கு தையல் போடும்படி சொல்லி உள்ளார்.

கோணிப்பை
மயக்க ஊசி, மருந்து எதுவுமே தராமல் பெண்ணை அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்துவிட்டார் அந்த துப்புரவு பெண். ஏதோ கிழிந்த கோணிப்பையை அசால்ட்டாக ஊசியால் குத்தி தைப்பதைபோல, தையல் போட ஆரம்பித்துவிட்டார்.

கதறுகிறார்
ஏற்கனவே ரத்தம் ஒழுகி, அடிபட்டு வலியால் வந்த அந்த பெண்ணோ, நேரடியாகவே மண்டையை ஊசியால் தைக்கும் வலியை தாங்கவே முடியாமல் கதறுகிறார். "ம்மா.. வலிக்குதும்மா" என்று அழுகிறார். அந்த துப்புரவு பெண்ணோ அசரவில்லை.. "இன்னும் ஒரு தையல்தான், முடிஞ்சிருச்சு" என்கிறார் கூலாக.

அதிர்ச்சி
இந்த காட்சியை, அந்த பெண்ணுடன் துணைக்கு வந்தவரே செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் போட்டுள்ளார். மயக்க மருந்து இல்லாமலேயே இப்படி ஒரு கொடூரம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications