For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர் வந்துடுச்சு... தர்மயுத்தம் எப்ப சார் தொடங்குவீங்க... விஷாலை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்

ஆர்.கே நகரில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் கொடுத்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே நகரில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக நடிகர் விஷால் அறிவித்து இருந்தார். இதற்காக விஷால் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த நிலையில் ஆர்.கே நகரில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் கொடுத்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இதை வைத்து நெட்டிசன்ஸ் விஷாலை கலாய்த்து வருகின்றனர்.

விஷாலின் அரசியல் வாழ்க்கையில் விழுந்திருக்கும் இந்த முதல் பேரிடியை வைத்து காமெடியாக நிறைய போஸ்ட்களை எழுதி வருகின்றனர்.

என்ன பண்ண போறீங்க

இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த தீபாவின் மனுவும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ''எல்லாரோட வேட்பு மனுவையும் நிராகரிச்சு என்னய்யா சாதிக்கப் போற'' என்று விஷால் கேட்பது போல இவர் எழுதி இருக்கிறார்.

இது தேவையா

இந்த நிலையில் விஷாலுக்கு அருகில் இருப்பவர்களுக்கு சரியான அரசியல் அறிவு இல்லை என்று இவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் "வேட்புமனுவை கூட புரிந்து கொள்ளாத இவர்கள் எப்படி ஒரு தலைவராக முடியும்! அதற்கான ஆட்களை கூட அருகில் வைத்து கொள்ளாத இந்த அசிங்கம் தேவையா?'' என்று கேட்டு உள்ளார்.

சுமோல வந்து இருக்கலாம்

அவர் பைக்கில் வந்ததை கிண்டல் செய்து இருக்கிறார். அதில் ''கெத்தா அந்த சுமோவிலேயே வந்திருக்கலாம்.. ப்ச்
இப்ப பிசுபிசுத்து போயிடுச்சு'' என்று காமெடியாக குறிப்பிட்டு இருக்கிறார்.

சாதாரணம் இல்லை


இவர் விஷாலுக்கு, தீபாவிற்கு அறிவுரை கூறியிருக்கிறார். அதில் " அரசியல்ல இதுலாம் சாதாரணமப்பா...ஆனால்
அரசியல் சாதாரணமில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தர்ணா ஏன்


இந்த நிலையில் விஷால் திடீர் என்று சாலை மறியல் செய்தார். அதை பற்றி இவர் "விஷால் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா...குழாய் அடியில் உருண்டு என்ன பண்றது கோவில்ல உருளனும்..!'' என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Vishal's nomination rejection has been trolled in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X