குடும்ப பிரச்சனைக்கு நடுவில் ஆப்பிரிக்க பழமொழியை போட்டு சூட்டைக் கிளப்பும் விவேக் ஜெயராமன்!
விவேக் ஜெயராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆப்பிரிக்க பழமொழி தினகரன் தரப்பை சூடாக்கியுள்ளது.
சென்னை: விவேக் ஜெயராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆப்பிரிக்க பழமொழி தினகரன் தரப்பை சூடாக்கியுள்ளது.
சசிகலா குடும்பத்திற்குள் பெரும் மோதல் வெடித்துள்ளது. தினகரனின் தனிக்கட்சி ஆவர்த்தனம் திவாகரன், விவேக் ஜெயராமன் உள்ளிட்ட யாருக்கும் பிடிக்கவில்லை.
இதுவரை பனிப்போராக இருந்த குடும்ப சண்டை தற்போது வீதிக்கு வந்துள்ளது. சசிகலாவின் சகோதரரான திவாகரன், தினகரனை சரமாரியாக சாடி வருகிறார்.

சசிகலா சிறைக்கு சென்றதற்கு காரணமே தினகரனும் அவரது பேராசையும்தான் என பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார். அவரது மகன் ஜெயானந்தும் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இந்நிலையில் விவேக் ஜெயராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆப்பிரிக்க பழமொழி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது 'நீ வேகமாக போக விரும்பினால் தனியாக போ, நீ நீண்ட தூரம் போக விரும்பினால் சேர்ந்து போ' ஆப்பிரிக்க பழமொழி. நம் அனைவருக்கும் ஒரு வலுவான நினைவூட்டல். இவ்வாறு விவேக் ஜெயராமன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே தினகரன் தனி ஆவர்த்தனம் செய்து வருவதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இப்படியொரு பழமொழியை போட்டு தினகரனுக்கு எதிரான கோதாவில் தன் பங்குக்கு குதித்துள்ளார் விவேக் ஜெயராமன்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications