இன்று விவேக் மனைவிக்கு பிறந்தநாளாம்.. வாழ்த்து சொல்ல முடியவில்லையே என உறவினர்கள் கதறல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விவேக்கிற்கு இத்தனை சொத்துகளா?.. | விவேக்கிற்கு பணத்தால கண்டம்- வீடியோ

சென்னை : வருமான வரித்துறையின் சோதனையால் 3 நாளாக வீட்டிற்குள் சிறைபட்டுக் கிடக்கும் விவேக்கின் மனைவி கீர்த்தனாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களை அதிகாரிகள் அனுமதி அளிக்காததால் அவர்கள் வாசலிலேயே காத்திருக்கின்றனர்.

ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியும், ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குனருமான விவேக்கின் சென்னை மகாலிங்கபுரம் வீட்டில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விவேக் வீட்டில் இருக்கும் ஆவணங்களை சரிபார்த்து வரும் அதிகாரிகள், சினிமா தியேட்டர் ள்ளிட்ட தொழில்களுக்கான முதலீடுகள் எங்கிருந்து வந்தன அதற்கான வருமான ஆதாரங்கள் என்றும் தோண்டித் துருவி வருகின்றனர்.

இந்நிலையில் முதல் நாள் வருமான வரி அதிகாரிகள் வீட்டிற்கு சோதனைக்கு வந்த போதே வீட்டில் இருந்தது விவேக்கின் மனைவி கீர்த்தனா தான். அவர் தான் அதிகாரிகளை வரவேற்று அவர்களுக்கு டீ கொடுத்து உபசரித்தாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து பெங்களூரு சென்றிருந்த விவேக் அவசரமாக வீட்டிற்குத் திரும்பினார்.

 அதிகாரிகள் பார்வையில்

அதிகாரிகள் பார்வையில்

விவேக் வீட்டின் தண்ணீர் தொட்டி முதல் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆடம்பர கார்களான பிஎம்டபிள்யூ, ஜாக்குவார் உள்ளிட்ட 4 உயர் ரக கார்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதிகாரிகள் சோதனை காரணமாக விவேக்கும்,அவருடைய மனைவி கீர்த்தனாவும் முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளனர்.

 கீர்த்தனாவிற்கு பிறந்தநாள்

கீர்த்தனாவிற்கு பிறந்தநாள்

அவர்களிடம் இருந்த எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத வகையில் அதிகாரிகளின் நேரடி பார்வையில் உள்ளனர். இந்நிலையில் விவேக்கின் மனைவி கீர்த்தனாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் வாழ்த்து கூற அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.

 உறவினர்கள் காத்திருப்பு

உறவினர்கள் காத்திருப்பு

ஆனால் அவர்களை வீட்டிற்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பதால் கீர்த்தனாவின் பெற்றோர், சகோதரர் மற்றும் உறவினர்கள் அனைவரும் மகாலிங்கபுரம் வீட்டு வாசலிலேயே சேர் போட்டு காத்திருக்கின்றனர். தங்களின் மகளை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு கேக் ஊட்டிவிட்டு வரக்கூட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று வருத்தப்படுகின்றனர்.

 வெளியே வந்து பார்க்க கூட அனுமதியில்லை

வெளியே வந்து பார்க்க கூட அனுமதியில்லை

வெளியே வந்து கீர்த்தனா எங்களை பார்த்து செல்லக் கூட விடாமல் அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தனை நெருக்கடியிலும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு கேக் ஊட்டிவிட்டு செல்ல வந்திருக்கும் இவர்களின் அடேங்கப்பா பாசத்தையெல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vivek wife Keerthana's relatives halted in front of her house to wish her as today is her birthday but officials rejected permission to meet her.
Please Wait while comments are loading...