For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்கே நகரில் 1 லட்சம் வாக்காளர்களுக்கு 3 நேரத்தில் பணம் பட்டுவாடா... எல்லாமே ரூ.2000 நோட்டு!

ஆர்கே நகர் தொகுதியில் ஒரு லட்சம் பேருக்கு மூன்று மணி நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரணகளத்திலயும் இவருக்கு வந்த கிளுகிளுப்பைப் பாருங்களேன்- வீடியோ

    சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் ஒரு லட்சம் பேருக்கு மூன்று மணி நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அனைத்துமே 2000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

    ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றன.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் ஆர்கே நகர் ஸ்பெஷலாக கவனிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியை நழுவ விட்டுவிடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது அதிமுக.

    அனல் பறக்கும் ஆர்கே நகர்

    அனல் பறக்கும் ஆர்கே நகர்

    ஜெயலலிதாவுக்குப் பிறகு நாங்கள் தான் அசைக்க முடியாத சக்தி என காட்டிக்கொள்ள திமுகவும் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்போடு உள்ளது. இதனால் ஆர்கே தொகுதி தேர்தல் களம் அனல் பறக்கிறது.

    3 மணி நேரத்தில்..

    3 மணி நேரத்தில்..

    இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களுக்கு இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

    எஞ்சியவர்களுக்கு நாளைக்குள்

    எஞ்சியவர்களுக்கு நாளைக்குள்

    80 சதவீத வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. எஞ்சிய வாக்காளர்களுக்கு இன்று இரவோ அல்லது நாளையோ கொடுத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    அத்தனையும் ரூ.2000 நோட்டு

    அத்தனையும் ரூ.2000 நோட்டு

    வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் புதிய 2000 ரூபாய் நோட்டாகும். இதனால் ஆர்கே நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    money giving to RK Nagar voters. Today one lakh people got new 2000 rupees note money in 3 hours in RK nagar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X