For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் கை தட்டுவதெல்லாம் நல்ல கருத்துகள் என எடுத்துக்கொள்ள முடியாது.. தமிழிசை பொளேர்!

மக்கள் கை தட்டுவதெல்லாம் நல்ல கருத்துகள் என எடுத்துக்கொள்ள முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் கை தட்டுவதெல்லாம் நல்ல கருத்துகள் என எடுத்துக்கொள்ள முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்தும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்தும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

we can not take people clapping ideas all are good : Tamilisai

படத்தில் வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், படத்தில் விமர்சிப்பது கருத்துச்சுதந்திரம் என்றால் அதனை நாங்கள் விமர்சிப்பதும் கருத்துசுதந்திரமே என்றார்.

மக்கள் கை தட்டும் கருத்துக்கள் எல்லாம் நல்ல கருத்துக்கள் என எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பணமதிப்பிழப்பு மட்டுமல்ல கமல் மன்னிப்பு கேட்க வேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கிறது என்றும் தமிழிசை கூறினார்.

பணமதிப்பிழப்பால் திருடுவதும் குடிப்பதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது என தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
Tamilisai said we can not take people clapping ideas all are good. She said If the movie dialogues are freedom of speech means then our statement also freedom of speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X