For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்., பாஜக அல்லாத மத்திய அரசுதான் அதிமுகவின் லட்சியம்: ஜெ. திட்டவட்டம்!!

By Mathi
|

ஆரணி: மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அல்லாத அரசு அமைவதுதான் அதிமுகவின் லட்சியம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸை மட்டும் விமர்சித்து வந்த ஜெயலலிதா, ஞாயிற்றுக்கிழமையன்று பாரதிய ஜனதா மீது தாக்குதல் தொடுத்தார். ஆனால் காவிரி பிரச்சனையில் மட்டும் பாஜகவை விமர்சித்தார்.

இதையும் எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை. காவிரி பிரச்சனையில் மட்டும்தான் விமர்சிப்பீர்களோ என்று கேள்வி எழுப்ப இப்போது பாஜகவை ஒட்டுமொத்தமாக எதிர்த்து பேசியுள்ளார் ஜெயலலிதா.

We will work for non-BJP, non-Cong. govt at Centre: Jayalalithaa

வேலூர் லோக்சபா தொகுதியில் ஆரணியில் ஜெயலலிதா இன்று பேசியதாவது:

மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசால் நாட்டில் பொருளாதாரம் வீழச்சியடைந்துள்ளது. காங்கிரஸ் பிடியில் இருந்து நாட்டை காப்பாற்றும் தருணம் வந்து விட்டது.

அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவை காக்க காங்கிரசை அகற்ற வேண்டும். தமிழர் நலனின் காங்கிரஸ், பாரதிய ஜனதா கடசிகளுக்கு அக்கறை இல்லை.

மத்தியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத ஆட்சி அமைவதே அ.தி.மு.க.வின் லட்சியம்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

English summary
The AIADMK will strive for the formation of a non-BJP and non-Congress government at the Centre, the Tamilnadu Chief Minister, Jayalalithaa, told in campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X