For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கிகளை போல இனி பெட்ரோல் பங்குகளுக்கும் வார விடுமுறை.. டீலர் கூட்டமைப்பு எச்சரிக்கை

வங்கிகள் பாணியில் பெட்ரோல் பங்குகளுக்கும் வார விடுமுறை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார் தமிழக பெட்ரோலிய டீலர்ஸ் கூட்டமைப்பு தலைவர் முரளி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் - டீசல் விற்பனை நிலையங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதைதொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல் கொள்முதல் செய்வதை 2 நாட்களுக்கு நிறுத்தி வைத்து போராட்டம் நடத்தி வருகிறது தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம்.

Weekly leave will be declared to petrol bunk

தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பு தலைவர் முரளி கூறியதாவது: டீலர் கமிஷன் தொடர்பாக மும்பையில் எண்ணெய் நிறுவனங்களிடம் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் கமிஷனை தர ஒப்பு கொள்ளாவிட்டால் நாளை முதல் பெட்ரோல் பங்க் விற்பனை நேரம் குறைப்பு போராட்டம் நடத்தப்படும்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் பங்க் செயல்படும் என்றும், வங்கிகள் போல பெட்ரோல் பங்க்குகளுக்கு வார விடுமுறை விடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Weekly leave will be declared to petrol bunk to show our agitation, says Murali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X