விஜயகாந்த் உடல் நலத்தில் என்னதான் பிரச்சினை?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விஜயகாந்த் உடல்நிலையில் என்னதான் பிரச்னை?- வீடியோ

    சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    மூச்சுத்திணறல் காரணமாக அவர் சிகிச்சை பெற்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விஜயகாந்த் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மட்டும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

    தொடர் சிகிச்சை

    தொடர் சிகிச்சை

    'கேப்டன்' விஜயகாந்த் உடல்நிலையில் என்ன பிரச்சனை என்று தேமுதிக தொண்டர்கள் அவரது ரசிகர்களும் பதைபதைப்போடு உள்ளனர். இதுபற்றி தேமுதிக வட்டாரத்திலும் அவரது குடும்ப வட்டாரத்தில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன. விஜயகாந்த் தற்போது மூச்சு திணறல் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அவருக்கு ஏற்கெனவே சர்க்கரை குறைபாடு இருக்கிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை அவர் இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இப்போது, அது வாரம் ஒரு முறை என அதிகரித்துள்ளது.

    தொண்டை அறுவை சிகிச்சை

    தொண்டை அறுவை சிகிச்சை

    தொண்டையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தைராய்டு உள்ளிட்ட கோளாறுகளும் அவருக்கு ஏற்பட்டுள்ளன. உடல்நலம் மற்றும் ஹார்மோன் பிரச்சினைகள் காரணமாக அவரது ஞாபக சக்தியும் குறைந்து உள்ளது.

    வெளிநாட்டு சிகிச்சைகள்

    வெளிநாட்டு சிகிச்சைகள்

    ஏற்கனவே சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஜயகாந்த், அதன் பிறகு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அமெரிக்க சிகிச்சைக்கு பிறகும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதைதான் இப்போதைய நிலை உணர்த்துகிறது. சர்க்கரை குறைபாடு மற்றும் சில வயோதிகம் சார்ந்த பிரச்னைகளும் சேர்ந்து கொண்டு தான் விஜயகாந்த்தை பாடாய்படுத்துகிறது.

    பழைய பன்னீர்செல்வம்

    பழைய பன்னீர்செல்வம்

    1980, 90களில் வெளியான எத்தனையோ திரைப்படங்களில் பல பக்க டயலாக்குகளை ஒரே டேக்கில் பிரமாதமான பஞ்ச்களுடன் பேசியவர் விஜயகாந்த். அவரது பேச்சு, உச்சரிப்பு, நடை, பாவனைகளுக்காகவே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஆனால் இன்று அந்த தனித் தன்மைகள் அனைத்தையும் உடல் நிலை கோளாறுகள் பறித்துக் கொண்டன. விஜயகாந்த்தை, அவரது குடும்பத்தார், விரைவில் வெளிநாடு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பிறகாவது விஜயகாந்த் பழைய பன்னீர்செல்வமா திரும்ப வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுதல்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+