Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வில் ஸ்மித் முதல் ரெஜினா வரை.. உலகில் எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் கிகி சேலஞ்ச்.. என்ன பாஸ் இது?

உலகம் முழுக்க கிகி சேலஞ்ச் எனப்படும் வித்தியாசமான சவால் வைரல் ஆகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ

    சென்னை: உலகம் முழுக்க கிகி சேலஞ்ச் (#KIKIChallenge) எனப்படும் வித்தியாசமான சவால் வைரல் ஆகி இருக்கிறது. கடந்த ஒருமாதமாக உலகத்தில் நோய் போல பரவி வந்த இந்த போட்டி தற்போது தமிழ்நாட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது.

    ஐஸ் பாக்கெட் சேலஞ்ச், மோடியின் பிட்னஸ் சேலஞ்ச் எல்லாம் உலகம் முழுக்க வைரல் ஆனது. முக்கியமாக மோடி லட்சங்களை செலவு செய்து வீடியோ எடுத்த பிட்னஸ் சேலஞ்ச் ஏலியன் லெவல் ஹிட் அடித்தது.

    இந்த நிலையில் தற்போது கிகி சேலஞ்ச் (#KIKIChallenge) அல்லது இன் மை பிலிங்ஸ் சேலஞ்ச் (#InMyFeelingsChallenge) எனப்படும் வித்தியாசமான வைரல் சேலஞ்ச் செலவு இல்லாமல் உலகம் முழுக்க பிரபலம் ஆகி இருக்கிறது. பலர் இதற்கு அடிமையாகி கூட இருக்கிறார்கள்.

    என்ன சேலஞ்ச்

    ''கி கி டூ யு லவ் மீ (kiki do you love me)'' என்ற பாடல் பின்பக்கம் ஓட, காரோ, பைக்கோ, ரயிலோ, அதில் இருப்பவர் கீழே இறங்கி, வெளியே சென்று வாகனத்தை துரத்திக் கொண்டே டான்ஸ் ஆட வேண்டும் அதுதான் சேலஞ்ச். கேட்க கொஞ்சம், கஷ்டமாக இருந்தாலும் இந்த சேலஞ்ச் கொஞ்சம் ஜாலியானது, பார்க்கவும் அம்சமாக இருக்கும்.

    பாடல் என்ன

    கி கி டூ யு லவ் மீ என்ற பாடல் கனடாவை சேர்ந்த டிரேக் என்ற பிரபல ராப் பாடகர் எழுதி வெளியிட்ட பாடல் ஆகும். இந்த பாடலின் பெயர் இன் மை பிலிங்ஸ். இந்த பாடல் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டாலும் இப்போதுதான் வைரலாகி உள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த பாடலை, கோடி பேர் யூ டியூப்பில் பார்த்து இருக்கிறார்கள். பல தளங்களில் இதை கேட்டு வருகிறார்கள்.

    எப்படி

    இந்த பாடல் அதுவாக ஒரு ஓரத்தில் யூ டியூப்பில் இருந்தது. ஆனால் பிரபல அமெரிக்க காமெடியன் ஷிக்கி, இந்த பாடலை வைத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். அப்போதில் இருந்து இந்த பாடலை வைத்து பலரும் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

    இந்தியாவிலும் வைரல்

    இந்த பாடல் இந்தியாவிலும் வைரல் ஆனது. இதில் வரும் வீடியோக்கள் எல்லாம் ஹிட் ஆகி வருகிறது. சிலர் இதை வைத்து காமெடியும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    விலங்குகள் வீடியோ

    மனிதர்கள் மட்டுமில்லாமல் விலங்குகளை வைத்தும் இந்த சேலஞ்ச் செய்கிறார்கள். சில சமயங்களில் மனிதர்களை விட விலங்குகள் அழகாக செய்கிறது.

    காரில் வந்த தேர்

    அதோடு இல்லாமல் உலகில் உள்ள சில பிரபலங்கள் இதை ஏற்றுக்கொண்டு வீடியோ வெளியிட்டார்கள். வில் ஸ்மித், ரெஜினா கெசான்ரா ஆகியோரும் வீடியோ வெளியிட்டனர். இதோ காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆடும் தேர்!

    போலீஸ் நடவடிக்கை

    உலகம் முழுக்க இதற்கு எதிர்ப்பும் வந்துள்ளது. இந்தியாவில் போலீஸ் இதை செய்ய கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறது. எகிப்தில் போலீஸ் இதை தடையே செய்து இருக்கிறது, மீறி செய்தால் ஜெயிலில் சென்று டான்ஸ் ஆட வேண்டியதுதான். நிறைய பேர் இதனால் விபத்திற்கு உள்ளானதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+