மெரினாவில் சறுக்கிய அழகிரி.. அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன?
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் மு.க அழகிரி சார்பில் பெரிய அளவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: மெரினாவில் பெரிய அளவில் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அழகிரி அறிவிப்பு ஒன்றையும் வெளியிடவில்லை. இதனால் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுப்பியுள்ளது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை மு.க அழகிரி தலைமையில் நோக்கி இன்று அமைதி பேரணி நடத்தினார். இன்று காலை ஆதரவாளர்களுடன் இணைந்து பேரணி நடத்தினார்.
இந்த அமைதி பேரணி திருவல்லிக்கேணி காவல் நிலையம் முதல் கருணாநிதி சமாதி வரை நடந்தது. இதில் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.

கருணாநிதி சமாதி அலங்காரம்
இந்த பேரணிக்காக கருணாநிதியின் சமாதியில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சமாதி முழுக்க பூக்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல் சுற்றி உள்ள பாதையிலும் பூக்கள் வைக்கப்பட்டு பிரமாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டது.

இரவோடு இரவாக செய்யப்பட்ட ஏற்பாடுகள்
இந்த ஏற்பாடுகள் எல்லாம் நேற்று இரவோடு இரவாக செய்யப்பட்டது. அழகிரியின் தொண்டர்கள் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்த விதமான எதிர்ப்பும் காட்டப்படவில்லை. அதேபோல் சென்னையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

முக்கிய அறிவிப்பு இல்லை
இந்த நிலையில் மெரினாவில் அழகிரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. சென்னையில் காணப்படும் போஸ்டர்களில் எல்லாம் இதற்கு தொடர்பான வசனங்களே காணப்பட்டது. அதேபோல் கருணாநிதியின் சமாதியில் அவரின் ''போராட்டம்'' குறித்த கவிதை ஒன்றும் இடம் பிடித்து இருந்தது. ஆனால் அழகிரி அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அடுத்து என்ன
இதனால் அழகிரியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுந்துள்ளது. அழகிரி இப்படியே அமைதியாகிவிடுவாரா, இல்லை மீண்டும் கட்சியில் சேர தூது அனுப்புவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு எதிராக செயல்படுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
-
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications