For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழையாம், புயலாம்.. இடைத்தேர்தலை வேண்டாம் என்று அரசு சொன்னதற்கு உண்மை காரணம் என்ன?

தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலை இப்போது நடத்த வேண்டாம் என்று அரசு சார்பில் கூறப்பட்டதற்கு நிறைய காரணங்கள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலை இப்போது நடத்த வேண்டாம் என்று அரசு சார்பில் கூறப்பட்டதற்கு நிறைய காரணங்கள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது. அதிமுக எம்எல்ஏ டிகே போஸ் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். இதனால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தெலுங்கானா, மத்திய பிரதேம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மாறாக இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தல்கள் பின்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

[கொடுமை.. பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து கழுத்தை நெறித்து கொன்ற தந்தை]

காரணம் என்ன

காரணம் என்ன

இதற்கு தேர்தல் ஆணையம் காரணம் ஒன்று சொல்லி இருக்கிறது. அதன்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்காகத்தான் இப்போது தேர்தலை அறிவிக்கவில்லை. தமிழக தலைமை செயலாளர், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியதால், தேர்தலை அறிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தோல்வியா?

தோல்வியா?

ஆனால் இதற்கு உண்மையான காரணம் இது கிடையாது என்று அரசியல் வட்டாரத்தில் நிறைய விஷயங்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இரண்டு தொகுதியில் திருப்பரங்குன்றத்தில் டிடிவி தினகரனுக்கும், திருவாரூரில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை தமிழக அரசுக்கு தெரிவித்து இருப்பதாகவும். அங்கும் ஆர்.கே நகர் போல் தோற்க கூடாது, அதனால் சாதகமான சூழ்நிலை வரும்வரை தேர்தலை நடத்த வைக்க கூடாது என்று இந்த மழை காரணத்தை சொல்லி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

அரசு கவிழ்கிறதா?

அரசு கவிழ்கிறதா?

வேறு சிலர் இதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். சில அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, மொத்தமாக தமிழக அரசே கலைய வாய்ப்பு உள்ளது. ஜனவரி இறுதியில் அரசு கலைய வாய்ப்புள்ளது. அதன்பிறகு சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும். இதனால் இடைத்தேர்தலை அரசு தவிர்க்க வேண்டி இந்த புயல் சின்னம் காரணத்தை கூறியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

சில மாற்றங்கள் நடக்கலாம்

சில மாற்றங்கள் நடக்கலாம்

இந்த இடைத்தேர்தலை எதிர்நோக்கி இருந்த திமுக, டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு நெருக்கானவர்கள், இப்போதே சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை செய்ய தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆளுநர், துணை வேந்தர் நியமனத்தில் தமிழக அரசை நேரடியாக குற்றஞ்சாட்டியதும் இந்த ஆட்சி கலைப்பின் ஒரு படிதான் என்கிறார்கள்.

English summary
There are a lot of reasons behind TN Govt decision on asking ECI to postpone the by-election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X