For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பெரியாரிசம், அண்ணாயிசம், ஆன்மீக அரசியல்".. கமலோட பாதை என்னவாக இருக்கும்?

Google Oneindia Tamil News

Recommended Video

    சொந்த ஊரில் அதிரடியாக அரசியல் களம் இறங்கும் கமல்

    சென்னை: ரஜினி ஆன்மீக அரசியல் என்று கூறி விட்டார். அடுத்து கமல் குதிக்கப் போகிறார்.. அரசியலில். அவரது அரசியல் என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சமூக வலைதளங்களில் ரஜினியின் ஆன்மீக அரசியலை ஏற்கனவே மக்கள் வைத்து செய்து விட்டனர். அதற்கு ரஜினியே விளக்கம் சொல்லியும் கூட மக்கள் அதை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் கமல் அரசியல் அடுத்து ரிலீஸாகப் போகிறது. இவருடைய அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

    அந்த இஸம் இந்த இஸம் அண்ணாயிசம்

    அந்த இஸம் இந்த இஸம் அண்ணாயிசம்

    மார்க்சிஸிசம் உள்ளிட்ட பல இஸங்களைப் பார்த்த பூமி இது. தமிழகத்திலோ பெரியாரிஸம், அண்ணாயிசம் வரை பார்த்து விட்டோம். இந்த நிலையில் புதிய "அரசியல் குழந்தைகளான" ரஜினியும், கமலும் புதிய இஸங்களைப் படைக்க கிளம்பி வந்துள்ளனர்.

    ரஜினியின் ஆன்மீகம்

    ரஜினியின் ஆன்மீகம்

    ரஜினி தெளிவாகச் சொல்லி விட்டார். நான் கடைப்பிடிக்கப் போவது ஆன்மீக அரசியல் என்று. பாபா சிம்பலையும் காட்டி விட்டார். ஸோ அவரது பாதை தெளிவாகத் தெரிந்து விட்டது. இவரது செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும் என்பதை அவரது நடவடிக்கைகள் உணர்த்தி வருகின்றன.

    கமலை நினைச்சாதான்

    கமலை நினைச்சாதான்

    ஆனால் கமல் அரசியலை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. அவரரது நிலைப்பாடு சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாதது. அவரது டிவீட்டைப் புரிந்து கொள்ளவே சில பல டிக்ஷனரிகளை புரட்டிப் பார்த்து பரோட்டா சாப்பிட்டு விட்டு நிதானமாக யோசித்துப் பார்த்தால்தான் புரிகிறது. இந்த நிலையில் அவர் கடைப்பிடிக்கப் போகும் அரசியல் எப்படி இருக்கும் என்பது அதிர்பார்ப்புக்குரியது.

    என்ன மாதிரி இருக்கும்

    என்ன மாதிரி இருக்கும்

    தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அவர் வாழ்ந்த பூமிதான் ராமநாதபுரம். அந்த மண்ணிலிருந்துதான் தனது அரசியல் பயணத்தை கமல் தொடங்கப் போகிறார். அப்படியானால் தேவர் காட்டிய கண்களில் இரண்டில் ஒன்றை அவர் கையில் எடுப்பாரா? நிச்சயம் அது தெய்வீகமாக இருக்க முடியாது.

    கம்யூனிச பாதையில் போவாரா

    கம்யூனிச பாதையில் போவாரா

    கம்யூனிஸ்ட் உணர்வை பலமுறை காட்டியுள்ளார் கமல். நாத்திகம் பேசியவர், பேசுபவர். அன்பே சிவம் என்று போதித்தவர். கடவுள் இல்லைன்னு சொல்லலை, இருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்னு கூறியவர். ஸோ, அவரது பாதை நாத்திகமாக இருக்குமா?

    அதிரடியா.. அறிவு சார் அரசியலா

    அதிரடியா.. அறிவு சார் அரசியலா

    அதிரடி அரசியலில் குதிப்பாரா அல்லது அறிவு சார் அரசியலை செய்வாரா.. அதிரடி அவருக்கு சரிப்பட்டு வரும் என்று தெரியவில்லை. அறிவு சார் அரசியலுக்கு வாய்ப்பு அதிகம். ஆனால் கமல் என்ன செய்வார் என்பது அவரைத் தவிர வேறு யாருக்குமே புரிவதில்லை, புரிந்ததும் இல்லை.

    மொத்தத்தில் ரஜினிக்கு எதிரான அரசியல் பாதையில் நிச்சயம் கமலின் அரசியல் பயணம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எந்தப் பாதை என்பதுதான் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

    English summary
    Rajnikanth has announced that he is going to follow Spiritual Politics, now its Kamal's turn. He is going to announce his party on Feb 21. What will be his way of politics?, a million dollar question.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X