நாயகன் கமலும், நம்மூர் கமலும் எண்ணூரில் சந்தித்த ஒரு அபூர்வ தருணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'நடிகர் கமல்', 'சமூக சேவகர் கமல்..' என எந்த அவதாரம் எடுத்தாலும், அவரின் தார்மீக கோபமும், அந்த ஸ்டைலும் மாறவேயில்லை.

1987ல் 'வேலுநாயக்கராக' வந்த அதே தோற்றத்தில்தான் 2017ம் ஆண்டின் 'கலைஞானி' கமலும் காட்சியளிக்கிறார். முகத்தில் அதே அறச்சீற்றம் பிரதிபலிக்கிறது. முன்னது, நடிப்பிற்காக, பிந்தையது சமூகத்திற்காக.

When Nayakan Velunayakkar meets Kamal at Ennore

இப்படி ஒரு சூழ்நிலையியில் நாயகன் கமலும், நாட்டு நடப்பு பேசும் கமலும் நேருக்கு நேர் இப்படி பார்த்துக்கொண்டால் என்ன பேசிக்கொள்வார்கள்.

நாயகனில் இடம் பெற்றிருந்த காலத்தால் அழியாத அந்த வசனம் இப்போது இருவரின் மனசாட்சியும் உரையாடிக் கொண்டால் மிகவும் பொருந்தும்.

"அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்"

"ஊருல உள்ள கழிவு மொத்தத்தையும் எண்ணூர் துறைமுக முகத்துவாரத்தில் கொண்டு சேர்க்குறான் பாரு, அவன நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன்"

என்பதாகத்தான் இரு கமல்களுமே பேசிக்கொள்ள நேரிடும். காரணம் அந்த வசனத்திற்கான தேவை படத்தில் எப்படி இருந்ததோ அதைவிட பல மடங்கு நிஜத்திலும் உள்ளது.

இந்த வசனத்தின் அடிப்படை ஒன்றுதான். சமூக அறச்சீற்றம். அந்த சீற்றம்தான் கமலின் உடல் மொழியை 30 வருடங்கள் கழித்தும் அப்படியே வைத்துக்கொண்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
When Nayakan Velunayakkar meets Kamal at Ennore at a pleasent morning.
Please Wait while comments are loading...