9 ஆண்டுகளுக்கு பிறகு அவலாஞ்சியில் மீண்டும் வெள்ளை புலி.. இது அசல் புலிதானா? நீலகிரியில் ஒரே கிலி
ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அவலாஞ்சி வனப்பகுதி எப்போதும் மர்மங்களுக்கும், வியக்கத்தக்க வனவிலங்குகளின் நடமாட்டத்திற்கும் பெயர் போன இடமாகும்.. இந்த சூழலில் 9 வருட நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த வனப்பகுதியில் மீண்டும் ஒரு வெள்ளை புலி தென்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த முக்கிய கோரிக்கை ஒன்றும் வலுக்க தொடங்கி உள்ளது.. எனன் நடந்தது அவலாஞ்சியில்?
கடந்த 2018-ம் ஆண்டு அவலாஞ்சி பகுதிக்கு சென்ற பெங்களூருவை சேர்ந்த போட்டோகிராபர் ஒருவர், 2 வெள்ளை நிற புலிகளை நேரில் கண்டு போட்டோ எடுத்துள்ளார்..
இந்த போட்டோக்களை அவர் வனத்துறையினரிடமும் தந்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அந்த வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்..

தென்பட்ட 2 வெள்ளை புலி
அந்த கேமராக்களில் பதிவான காட்சிகளில் 2 வெள்ளை புலிகள் உள்பட மொத்தம் 4 புலிகள் வனப்பகுதிக்குள் நடந்து செல்வது தெளிவாக பதிவாகியிருந்தது.. இதைக்கண்டு வனத்துறை அதிகாரிகள் செம மகிழ்ச்சி அடைந்தனர்... அந்த வெள்ளை புலிகளை தொடர்ந்து கண்காணிக்க கேமராக்களை பொருத்திய நிலையில், சில நாட்களுக்கு பிறகு அந்த புலிகளின் நடமாட்டம் கேமராக்களில் பதிவாகவும் இல்லை.
இதனால் அந்த புலிகள் வேறு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம் என்று வனத்துறையினர் கருதி வந்தனர்.. பிறகு கடந்த 2021-ம் ஆண்டு அவலாஞ்சி மின் நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதி அருகே வெள்ளை புலிகள் நடமாடியதாக தகவல் பரவியது.. ஆனால், அதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஒரு தடயமும் அந்த பகுதியில் கிடைக்கவில்லை..
அவலாஞ்சியில் மீண்டும் வெள்ளைப் புலி
இந்த நிலையில், இப்போது அவலாஞ்சி வனப்பகுதியில் மலையின் மீது வெள்ளை புலி ஒன்று நடந்து செல்வதை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.. அந்த வீடியோவில், முட்புதருக்குள் நின்றிருந்த புலி நீண்ட நேரம் நின்று விட்டு மலையை கடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..
இப்படித்தான் கடந்த காலங்களிலும் அவலாஞ்சி பகுதியில் புலிகள் நடமாடுவது குறித்து சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகின.. இது குறித்து நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஏற்கனவே சில விளக்கங்களையும் தந்திருந்தனர்..
நீலகிரி வீடியோ உண்மையா
அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற வீடியோக்களில் பல பழைய வீடியோக்களாக இருக்க வாய்ப்புள்ளதால், அதன் உண்மைத்தன்மையை சரிபார்ப்பது அவசியம் என வனத்துறை தரப்பில் அடிக்கடி அட்வைஸ் செய்யப்பட்டும் வருகிறது.. இப்போது மீண்டும் ஒரு புலி வீடியோ பரவி வருவது பெரும் பரபரப்பை தந்து வருகிறது..
பரவி வரும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.. கடந்த 2018-ம் ஆண்டு 2 வெள்ளை புலிகள் இருந்த நிலையில், தற்போது ஒரே ஒரு வெள்ளை புலி மட்டும் தென்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது..
9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெள்ளை புலி
9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தென்பட்டுள்ள இந்த வெள்ளை புலி, அந்த காலகட்டத்தில் பார்த்த புலிகளில் ஒன்றா அல்லது வேறொரு புலியா என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.. கடந்த காலங்களில் வனத்துறை கேமராவில் பதிவான மற்ற புலிகளின் நிலை என்ன என்பது குறித்தும், இந்த வெள்ளை புலியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வனவிலங்கு ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்..
இப்போது தென்பட்டுள்ள வெள்ளை புலியின் நடமாட்டத்தை வைத்து வனத்துறையினர் மீண்டும் அந்த வனப்பகுதியில் கேமராக்களை பொருத்தி தீவிர ஆய்வில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.. இந்த மர்மமான வெள்ளை புலியின் வருகை உதகை வனப்பகுதியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது..!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications