ஜோதிகா வசனத்தால் யாருக்கு பாதிப்பு? சாட்சிகளின் பட்டியலை கொடுங்கள்.. கரூர் நீதிமன்றம் அதிரடி!
நாச்சியார் படத்தில் ஜோதிகா பேசிய வசனத்தால் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை தர கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

கரூர்: நாச்சியார் படத்தில் ஜோதிகா பேசிய வசனத்தால் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை தர கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டைரக்டர் பாலாவின் நாச்சியார் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரைலரின் கடைசியில் நடிகை ஜோதிகா கெட்ட வார்த்தை பேசிய காட்சி இடம்பெற்றது.
இதற்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜன் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்திய குடியரசு கட்சி வழக்கு
இந்நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை ஜோதிகா, டைரக்டர் பாலா மீது கடந்த மாதம் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் தொடர்ந்தார்.

ஆபாச வார்த்தை
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனவே ஜோதிகா மீதும், அப்படத்தின் டைரக்டர் பாலா மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிந்தார்.

பாதிக்கப்பட்ட சாட்சிகள்
இந்த வழக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாச்சியார் படத்தின் ஆபாச வசனத்தால் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை அளிக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாருக்கு பாதிப்பு?
ஜோதிகா பேசிய வசனத்தால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை அளிக்கவும் கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜன.11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
வழக்கு தொடர்ந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியனுக்கு கரூர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையை ஜனவரி 11-ம் தேதிக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications