For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரி.. ஸ்டாலின்.. மக்கள் யார் பக்கம் சாய்வார்கள்?

அழகிரி, ஸ்டாலினை மக்கள் எந்த அளவுக்கு ஆதரிக்கிறார்கள் என்துதான் கேள்வியே.

Google Oneindia Tamil News

சென்னை: திரும்பவும் ஆரம்பமாகிவிட்டது அழகிரி - ஸ்டாலின் பஞ்சாயத்து.

இருவருமே தங்களை கட்சியில் இளம் வயதிலேயே ஈடுபடுத்தி கொண்டவர்கள்தான். ஸ்டாலினை பொறுத்தவரை மத்திய சிறைச்சாலையில் அவசர நிலைக்காலத்தில், அடிபட்டு மிதிபட்டு, வதைப்பட்டு கட்சியை வளர்த்தெடுத்தவர். மிக முக்கிய பொறுப்புகளை வகித்து போதுமான அரசியல் ஞானத்தையும் பெற்றுள்ளவர்.

முதிர்ந்த பக்குவம்

முதிர்ந்த பக்குவம்

பொதுமக்களிடம் பல்வேறு சமயங்களில் நன்மதிப்பை பெற்று வருகிறார். ஒவ்வொரு விஷயங்களையும் இவர் அணுகும் பாங்கு நேர்த்தியாக உள்ளதாக பொதுமதிப்பு மக்களிடம் உள்ளது. நாள் ஆக ஆக பக்குவங்கள் பன்பட்டு மிளிர்ந்து காணப்பட்டும் வருகிறது. தற்போது அவர் முன் உள்ள தலையாய சவால்கள் நான்கு.

நான்கு பிரச்சனைகள்

நான்கு பிரச்சனைகள்

ஒன்று மத்திய அரசை எப்படி எதிர்கொள்வது, இரண்டாவது அதிமுக அரசினை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்குவது. மூன்றாவது குடும்ப உறுப்பினர்களான அரசியல் தலைகளை சமாளிப்பது, நான்காவது உள்கட்சி ரீதியான பிரச்சனைகள், விமர்சனங்களுக்கு தீர்வு காண்பது. இதில் மாநில, மத்திய, ஏன் உட்கட்சி பூசலை கூட சமாளித்துவிடுவார் போலிருக்கு. அழகிரி விஷயம் மட்டும் அவருக்கு நீண்ட காலமாகவே பெரும் குடைச்சலாகவே இருக்கிறது.

நாகரீகமான அரசியல்

நாகரீகமான அரசியல்

தடாலடி முடிவு, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது, அநாகரீக வார்த்தைகளையால் எதிர்க்கட்சிகளை வறுத்தெடுப்பது இதெல்லாம் ஸ்டாலினிடம் கிடையாது. ஆரம்ப நாட்களிலிருந்து இப்போது வரை ஒரு நாகரீகமான ஒரு அரசியல் பாதையிலேயே பயணித்து வந்துள்ளார்.

முதிர்ந்த பக்குவம்

முதிர்ந்த பக்குவம்

பொதுமக்களிடம் பல்வேறு சமயங்களில் நன்மதிப்பை பெற்று வருகிறார். ஒவ்வொரு விஷயங்களையும் இவர் அணுகும் பாங்கு நேர்த்தியாக உள்ளதாக பொதுமதிப்பு மக்களிடம் உள்ளது. நாள் ஆக ஆக பக்குவங்கள் பன்பட்டு மிளிர்ந்து காணப்பட்டும் வருகிறது. தற்போது அவர் முன் உள்ள தலையாய சவால்கள் நான்கு.

நான்கு பிரச்சனைகள்

நான்கு பிரச்சனைகள்

ஒன்று மத்திய அரசை எப்படி எதிர்கொள்வது, இரண்டாவது அதிமுக அரசினை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்குவது. மூன்றாவது குடும்ப உறுப்பினர்களான அரசியல் தலைகளை சமாளிப்பது, நான்காவது உள்கட்சி ரீதியான பிரச்சனைகள், விமர்சனங்களுக்கு தீர்வு காண்பது. இதில் மாநில, மத்திய, ஏன் உட்கட்சி பூசலை கூட சமாளித்துவிடுவார் போலிருக்கு. அழகிரி விஷயம் மட்டும் அவருக்கு நீண்ட காலமாகவே பெரும் குடைச்சலாகவே இருக்கிறது.

சமாளித்த ஸ்டாலின்

சமாளித்த ஸ்டாலின்

இரு துருவங்களும் நீண்ட காலமாகவே முரண்பட்டு நிற்கின்றன. அழகிரிக்கு மாநில அளவிலான பதவியை தூக்கி கொடுத்தால், கட்சியே ஆட்டம் கண்டுவிடுமோ என்று ஸ்டாலின் யோசிக்கிறாரா என தெரியவில்லை. ஆனாலும் ஸ்டாலின் என்ற பெயரை கேட்டாலே மக்களிடம் மரியாதை மிக்க ஒரு உணர்வு வந்து செல்கிறது. சட்டென்று கோபப்படுவதும், இவரைவிட மூத்த தலைவர்களைக் கூட சில சமயங்களில் அலட்சியப்படுத்துவதும், ஸ்டாலினின் எதிர்மறையான குணங்களாக கூறப்பட்டதும் உண்டு. ஆனால் அதையும் ஸ்டாலின் சமாளித்தே வந்துள்ளார்.

அழகிரியின் அன்பு

அழகிரியின் அன்பு

மறுபக்கம், தென்மண்டலங்களில் திமுகவை வார்த்தெடுக்க வேண்டும் என்று கருணாநிதியால் பணிக்கப்பட்டவர்தான் அழகிரி. தென்தமிழகத்தில் கட்சியினை பலப்படுத்துவதுடன், மதுரையின் முரசொலி நாளிதழின் பொறுப்பையும் பார்க்க வேண்டும் என்று கூறி அனுப்பப்பட்டவர்தான் அழகிரி. தந்தையின் சொல் கேட்டு நடந்த மகன், அந்த இரு பணிகளையும் சிறப்பாக செய்தார். அனைவரையும் மதித்து அன்பாக பேசும் பேச்சு தான் அவரது வெற்றிக்கு காரணமாக இருந்தது. ஒவ்வொரு தொண்டனின் வீட்டு நல்லது, கெட்டதுகளுக்கு உரிமையாக சென்று வரும் குணமுடையவர் அழகிரி. அனைத்து தொண்டர்களின் மீதும் பாசத்தை பொழிந்தார். கனிவாக நடத்தினார்.

கலைஞரின் பிம்பம்

கலைஞரின் பிம்பம்

இந்த குணத்தை கண்ட தென்மண்டல மக்கள், இன்னொரு கருணாநிதி மதுரையில் இருப்பதுபோலவே, அதாவது "கலைஞரின் பிம்பம்" என்றே அழகிரியை பார்க்க தொடங்கிவிட்டனர். பெரும் மதிப்பும் மரியாதையையும் வைத்துள்ளனர். அது தற்போதும் எள்ளளவும் அங்கு குறையவில்லை. ஒருவேளை கருணாநிதி, அழகிரியை தென்மண்டலம் என்று மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் திமுக வளர்ச்சி பணிகள் குறித்த பணியினை கொடுத்திருந்தால், அழகிரியின் செயல்பாடு மாநிலம் முழுவதும் வேறு மாதிரியாக கூட போயிருந்திருக்கலாம்.

அழகிரியை விரும்பும் தலைவர்கள்

அழகிரியை விரும்பும் தலைவர்கள்

தற்போதும் அழகிரிமீது திமுகவின் உயர்மட்ட தலைவர்களில் சிலர், அதிக ஆசையையும் பிரியத்தையும் மரியாதையையும் வைத்துள்ளனர். ஆனாலும் பதவி விருப்பம், யாராவது நம்மை ஏதாவது நினைக்ககூடும், சொல்லக்கூடும் என்ற ஐயம் காரணமாக அழகிரியிடமிருந்து வெளியுலகில் ஒதுங்கி உள்ளனர் என்பதுதான் உண்மை. தற்போதைய அரசியல் களத்தில் மக்களை ஸ்டாலினை ஏற்பார்களா?

ரத்தம் சிந்திய தொண்டர்கள்

ரத்தம் சிந்திய தொண்டர்கள்

அழகிரியை ஏற்பார்களா தெரியாது. ஆனால், திமுகவை ஆட்சிப்பீடத்தில் ஏற்றவும், கருணாநிதியை முதலமைச்சராக நாற்காலியில் அமர வைக்கவும், லட்சக்கணக்கான திமுகவினர், தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தியுள்ளார்கள். 60 ஆண்டு காலத்திற்கு மேலாக திமுகவை பாதுகாக்கவும், அதனை ஆட்சி பீடத்தில் அமர்த்தவும் கருணாநிதி அர்ப்பணித்த உழைப்பும் தியாகமும் அளப்பரியது. எத்தனையோ சோதனைகளையும், அடக்குமுறைகளையும், அவதூறுகளையும், பழிகளையும் தாண்டி கட்சியையும் ஆட்சியையும் பாதுகாத்த வந்த கருணாநிதி வகுத்த பாதை, தற்போது மாறிவிடக்கூடாதே என்பதே அடிமட்ட திமுக தொண்டனின் உள்ளக் குமுறலாகவும், திமுகவினரையும் தாண்டி ஒவ்வொரு குடிமகனின் வேட்கையாகவும் உள்ளது.

English summary
Who supports people? Stalin? or Azhagiri?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X