Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை.. நிருபர்கள் கேள்விக்கு முதல்வர் அளித்த அடடே பதில்

தூத்துக்குடியில் 144 தடை போடப்பட்டிருப்பதால் நேரில் சென்று மக்களை சந்திக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு..பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முதல்வர்-வீடியோ

    சென்னை: தூத்துக்குடியில் 144 தடை போடப்பட்டிருப்பதால் நேரில் சென்று மக்களை சந்திக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து திமுகவினர் இன்று தலைமைச்செயலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

    இதனால் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

    ஏன் சந்திக்கவில்லை?

    ஏன் சந்திக்கவில்லை?

    அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட தூத்துக்குடிக்கு ஏன் இதுவரை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செல்லவில்லை? ஏன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என செய்தியாளர்கள் கேள்வி கணைகளை தொடுத்தனர்.

    144 தடை அமலில் உள்ளது

    144 தடை அமலில் உள்ளது

    அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதலில் சட்டத்தை மதிக்கவேண்டும். தூத்துக்குடியில் 144 தடைச்சட்டம் அமலில் உள்ளது.

    கூடுவதற்கு தடை

    கூடுவதற்கு தடை

    144 தடைச்சட்டம் அமலில் உள்ள நிலையில் ஸ்டாலின் மக்களை நேரில் சந்தித்திருக்கிறார். 144 தடை அமலில் உள்ள போது அங்கு கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். 144 தடை சட்டம் கூட்டம் கூடுவதை தடுப்பதற்குதானே தவிர ஒரு மாநில முதல்வர் செல்வதை தடுக்க போடப்படுவது அல்ல. அப்படியிருக்கும்போது முதல்வரே இப்படி ஒரு பதிலை கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி சென்றவர்கள் மீது வழக்கு

    தூத்துக்குடி சென்றவர்கள் மீது வழக்கு

    முன்னதாக தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறி அதிக வாகனங்களில் சென்றதாக ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கமல், ஜி.கே.வாசன், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+