தமிழ்நாடு பார்க்காத கொடூரம்.. மொத்த நாட்டையும் உலுக்கிய கருணாபுரம் தெரு.. கேட்கவே குலை நடுங்குதே
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. அங்கே உள்ள கருணாபுரம் தெரு மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் கருத்து: இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 50 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும் கண்காணித்து வருகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளேன்.
அமைச்சர்கள் - உள்துறைச் செயலாளர் - காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் சென்று நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றனர்.
இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தெரு அதிர்ச்சி: கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. அங்கே உள்ள கருணாபுரம் தெரு மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கருணாபுரம் தெருவில் மட்டும் 10 பேர் பலியாகி உள்ளனர். சந்துக்கு ஒருவர் இங்கே பலியாகி உள்ளனர்.
இதனால் தெருவே மரண கோலம் பூண்டு உள்ளது. அங்கே மக்கள் கடும் வருத்தத்தில் சத்தமிடும் ஓலம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது.
எப்படி நடந்தது?: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக மிக முக்கியமான, அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரவீன்குமார், வயது 26, த/பெ. கணேசன் முதலில் அதிகாலை 3 மணியளவில் வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார்.
இவர் பலியான நிலையில்... அதன்படி விஷச்சாராயம் குடித்து இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர்களும் விஷ சாராயத்தை வந்து வாகனத்தில் விநியோகம் செய்துள்ளனர். அவர்களும் விஷ சாராயம் குடித்துள்ளனர். முதலில் உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை எல்லாம் தெரிந்தும் கூட.. நமக்கு எல்லாம் எதுவும் ஆகாது என்று நினைத்து இவர்கள் விஷ சாராயத்தை குடித்து உள்ளனர்.
பைக்கில் வந்த சிலர் கள்ளச்சாராயத்தை கொடுத்து.. துக்கத்தை போக்க இதை குடிங்க என்பது போல பேசி உள்ளனர். சிலர் அது கள்ளச்சாராயம் என்று தெரிந்து குடித்துள்ளனர். சிலர் அது கள்ளச்சாராயம் என்று தெரியாமல் குடித்துள்ளனர். சாராயம் விற்ற சிலருக்கு ஒரு தேசிய கட்சியின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
சுரேஷ் என்பவரின் மரணம்தான் தொடக்க புள்ளி. அங்கே வந்த 50 பேருக்கு கள்ளச்சாராயம் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள்தான் மருத்துவமனையில் உள்ளனர். ஒரு புள்ளியில் இருந்து இணைக்கப்பட்டு அங்கே வந்த எல்லோருக்கும் உடல் பாதிக்கப்பட்டு உள்ளது. அதில் தான் 33 பேர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications