உணவுத் துறை அமைச்சர் முதல் மீண்டும் சபாநாயகர்.... தனபாலுக்கு ஏறுமுகம் இதனால்தான்...
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகராக மீண்டும் தனபாலை அறிவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தனபாலுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கிடைத்து வருவதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
2001-ல் சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டார் தனபால். ஆனால் அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் பறக்க கடுப்பாகிப் போனார் ஜெயலலிதா.

பிறகென்ன போயஸ் கார்டனில் இருந்து தனபாலுக்கு அழைப்பு வருகிறது... சொந்த கட்சிக்காரங்களுக்கு சாப்பாடு கூட வாங்கித் தராமல் இருக்கிறீர்களே என டோஸ் விழுகிறது.
அனைத்தையும் வாங்கிக் கொண்டு கடைசியாக தனபால் அளித்த பதில், நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன். நான் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாலும் நம்ம கட்சியினர் யாரும் வாங்க மாட்டார்கள். வாங்கிக் கொடுத்த சாப்பாட்டையும் தொடக்கூட இல்லை என கட்சிக்குள் நிலவிய தீண்டாமையின் கோரத்தை கண்ணீரி மல்க கொட்டியிருக்கிறார்.
அதிர்ந்து போன ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்றியதுமே தனபாலை உணவுத்துறை அமைச்சராக்கிவிட்டார்.... பின்னர் துணை சபாநாயகராக்கி தொடர்ந்து சபாநாயகர் அரியாசனத்திலும் உட்கார வைத்தார்.
இந்தமுறையும் தனபாலை சபாநாயகராக உட்கார வைத்து அனைவரும் அவரை வணங்கும் நிலைக்கு உயர்த்தி இருக்கிறார் ஜெயலலிதா.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications