ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் மர்ம மரணங்கள் தொடருவது ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இறந்தார். அவருடைய மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு மர்ம மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் போலீசார் உரிய விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வரவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவருடைய மரணத்துக்கு பிறகு அரசியல் பலவித மாற்றங்கள் நடந்தன. சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பெற்றுக்கொண்டது, சிறைக்குச் சென்றது, தினகரன் துணைப் பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டது, அவரும் திஹார் சிறைக்குச் சென்றது என தமிழகமே திடீர், பகீர் மாற்றங்களை கண்டுகொண்டிருக்கிறது.

இந்நிலையில், முதலில் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில்தீ பிடித்து எரிந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம், திட்டமிட்ட சதியா என எந்த ஒரு விவரமும் போலீசார் வெளியே சொல்லாமல் வெறும் விபத்து என மூடி மறைத்தனர்.

கொடநாடு காவலாளிகள் தாக்குதல்

கொடநாடு காவலாளிகள் தாக்குதல்

அடுத்த சில நாட்களிலேயே ஜெயலலிதா சென்று அடிக்கடி தங்கும் கொடநாடு தேயிலை எஸ்டேட் பங்களாவில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் யாகத் தாக்கப்பட்டார். ஜெயலலிதாவின் பணத்தை கொள்ளையடிகவே இந்த கொலை நடத்தப்பட்டது என நீலகிரி காவல்துரை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறினார்.

கொடநாட்டில் கொள்ளை ஏன்?

கொடநாட்டில் கொள்ளை ஏன்?

ஆனல் அந்த வழக்கிலும் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ள 8 குற்றவாளிகள்,யார் தூண்டுதலின் பேரில் அங்கு கொள்ளையடிக்கச் சென்றனர் என்ற தகவலை கூறவே இல்லை. அப்படி உண்மை வெளிவருமா என்பதும் தெரியவில்லை

ஜெயலலிதா கார் ஓட்டுநர் மர்ம மரணம்?!

ஜெயலலிதா கார் ஓட்டுநர் மர்ம மரணம்?!

ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராகப் பணியாற்றிய கனகராஜ் என்பவர் இந்த கொடநாடு கொலைச் செமபவ்த்தில் முக்கிய குற்றவாளி. ஆனால் அவர் விபத்தில் மரணம் அடைந்துவிட்டார் என ஆத்தூர் போலீசார் கூறுகின்றனர். அது விபத்தா, திட்டமிடப்பட்ட கொலையா என்பதை போலீசார் தெளிவுபடுத்தவில்லை.

காண்ட்ராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை

காண்ட்ராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை

ஜெயலலிதாவின் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்களோடு, குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கரோடு நெருக்கமாக இருந்த சுப்பிரமணியன் என்ற கான்ட்ராக்டர் தற்கொலை செய்துகொண்டார்.அந்த தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சமையல்காரரையும் விட்டுவைக்கவில்லையே!

சமையல்காரரையும் விட்டுவைக்கவில்லையே!

ஜெயலலிதா வீட்டில் சமையல்காரராக வேலை பார்த்த பஞ்சவர்ணம் என்கிற முதியவரைத் மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். ஏன் ஒரு முதியவர் மீது இந்த கொடிய தாக்குதலை நடத்தினர் என்பதற்கான காரணத்தையும் போலீசார் விளக்கவில்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது போல, அவருடன் தொடர்புடைய நபர்களின் மரணத்திலும் தாக்குதல்களிலும் மர்மங்கள் நீடிப்பது அரசுக்கு நல்லதல்ல!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After Jayalalitha's death, her servants including car driver, cook been attacked. Fortunately cook escaped. Police has to find out the reason behind these attacks but they remain silent as usual.
Please Wait while comments are loading...