For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட்: 47 நாட்களுக்குப் பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்.. ரஜினி கேள்வி

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 47 நாட்களாக மக்கள் போராடி வரும் நிலையில் இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது புதிராக இருக்கிறது என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்ட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பல விதங்களில் கேடு விளைவிப்பதாகவும், அதனை உடனே மூடக்கோரியும் பொதுமக்கள் 47 நாட்களாகப் போராடி வருகின்றனர்.

Why the TN Government is silent on Sterlite Rajini on Twitter

இந்தப்போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இதுவரை தமிழக அரசு இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பிரச்னை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Why the TN Government is silent on Sterlite Rajini on Twitter. Rajinikanth on twitter Condemns the TN Government that, People are fighting for the past 47 days and why the Government is still silent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X