For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரட்டை இலை உதிரும்.. தமிழிசை ஜோசியம் - ஒருவேளை பலிச்சிருமோ?

ஆளுக்கு ஆள் முட்டிக்கொள்வதைப் பார்த்தால் தமிழிசை சொல்வதைப் போல இரட்டை இலையாக பிரிந்து விடுமோ என்று அதிமுக தொண்டர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    இரட்டை இலை உதிரும்.. தமிழிசை ஜோசியம் - ஒருவேளை பலிச்சிருமோ?- வீடியோ

    சென்னை: அதிமுகவில் ஆளுக்கு ஆள் ஒரு பக்கம் பேசி வருவதால் மீண்டும் பிளவு ஏற்பட்டு இரட்டை இலையாக பிரிந்து விடுவார்கள் என்று தமிழிசை சொன்ன ஜோதிடம் பலித்து விடுமோ என்று தொண்டர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

    ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அமாவாசையில் இணைந்தன அதிமுக அணிகள். அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பது மைத்ரேயன் கருத்து.

    முடக்கப்பட்டிருந்த இரட்டை இலையை மீட்டு விட்டனர். ஆனாலும் கொடியேற்ற விழாவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை.

    அணிகள் இணைவா? பிளவா?

    அணிகள் இணைவா? பிளவா?

    அதிமுக அணிகள் மீண்டும் பிளவு படும் என்று எதிர்கட்சியினரும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கூறி வருகிறார். தற்போதுதான் ஒருங்கிணைந்த அணியினருக்கு இரட்டை இலை கிடைத்துள்ளது. ஆனால், அதற்குள் மீண்டும் பிரிந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வைத்துப்பார்த்தால் அவர்கள் இரட்டை இலையாக பிரிந்துவிடுவார்கள் என்பதையே யூகிக்க வைக்கிறது என்றார்.

    ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள்

    ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள்

    இரு அணிகளும் இணைந்து விட்டதாக கூறினாலும் தொண்டர்களுக்கு இடையே சலசலப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. திருப்பூரில் ஜெயலலிதா நினைவு நாள் அஞ்சலி கூட்டம் நடத்து தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    அணிகளுக்கு இடையே ஒற்றுமையில்லை

    அணிகளுக்கு இடையே ஒற்றுமையில்லை

    எம்.எஸ்.எம். ஆனந்தனின் உதவியாளர் ஷாஜகான், தனது முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்பில் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன் ஆகியோரை விமர்சித்து தொடர்ந்து மீம்ஸ் போடுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. கட்சி நன்றாக இருக்க, அனைவரும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்று சமாதானப்படுத்தியுள்ளனர்.

    அதிமுக அலுவலகத்தில் கூட்டம்

    அதிமுக அலுவலகத்தில் கூட்டம்

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க அதிமுக உறுப்பினர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் வந்த போது உற்சாக குரல் எழுப்பினர்.

    இரு இலைகளாக பிரிந்து விடுமோ

    இரு இலைகளாக பிரிந்து விடுமோ

    அதே நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வந்த போது தொண்டர்கள் அமைதியாகவே இருந்தனர். கூட்டத்தில் ஆட்சிமன்ற குழு நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது. கார சார விவாதம் நடைபெற்றது. பிளவுபட்டிருந்த அணிகள் இணைந்து இருமாதங்களே நிறைவடைந்துள்ளன. அதற்குள்ளாக ஏற்பட்டுள்ள சலசலசப்பை வைத்து பார்த்தால் தமிழிசையின் ஆருடம் பலித்து விடுமோ என்று தொண்டர்கள் பேசிக்கொள்கின்றனர்.

    English summary
    ADMK factions united recently but now they are making noice again and expected another split soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X