For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலில் போட்டி: தமிழக ஆம் ஆத்மி முக்கிய நிர்வாகியின் நிலைப்பாடு என்ன?

Google Oneindia Tamil News

Will Christina Samy contest in LS polls?
சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான கிறிஸ்டினா் சாமி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா இல்லையா என்று இன்னும் தெரியவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 25 தொகுதியில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நிர்வாகியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான கிறிஸ்டினா சாமி தேர்தலில் போட்டியிடுகிறாரா இல்லையா என்ற சஸ்பென்ஸ் நீடிக்கின்றது.

இது குறித்து அக்கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, தற்போது அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பலரும் தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ.) நடத்தி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று கிறிஸ்டினா சாமியும் கரூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் தான்.

கிறிஸ்டினா சாமி மீது சில குற்றச்சாட்டுகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை சென்றதாகவும் அதனால் அந்த புகாரை வைத்து சிலர் அவரை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாகத் தான் அவர் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது. ஆனால் அந்த புகார்கள் குறித்த முழு நிலவரம் இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் உள்ள பலரும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட முக்கியத்துவம் அளித்துள்ளதாக தெரிய வருகின்றது.

ஆனால் தேர்தலில் போட்டியிட முன்வரும் நபர்களுக்கு தான் தலைமை வாய்ப்பு வழங்கும். அந்த வகையில் கிறிஸ்டினா சாமியை குறை சொல்ல முடியாது. ஆனால் அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா அல்லது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வாரா என்பதை இறுதி செய்யவில்லை. விரைவில் இது குறித்து தமிழ்நாடு தலைமை அறிவிக்கும் என்றனர்.

English summary
It is not clear whether Tamilnadu State convenor of the AAP, Christina Samy will contest in the lok sabha election or not.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X