ஜெயகுமாருக்கு தினகரன் போட்ட பிச்சையாம் நிதியமைச்சர் பதவி... வெற்றிவேல் ஆணவப் பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயகுமாருக்கு நிதியமைச்சர் பதவி தினகரன் போட்ட பிச்சை என தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏவான வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தினர் இன்றி ஆட்சியை நடத்த முடியுமா என்றும் அவர் சவால் விட்டுள்ளார்.

கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் நேற்று அதிரடியாக அறிவித்தனர். சசிகலாவால் கட்சிக்கு ஆபத்துள்ளதால் கட்சியையும் ஆட்சியையும் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

ஓபிஎஸ் அணி விலகளுக்கு பிறகு பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்கள் நிர்வாகிகள் ஒன்றிணைந்து சசிகலா தரப்பிலா ஆட்சியை அமைத்தனர். இந்நிலையில் தினகரன் தலைமையிலான அந்த அணியில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது.

சில எம்எல்ஏக்கள் ஆதரவு

சில எம்எல்ஏக்கள் ஆதரவு

இதனால் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரபப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில் எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், கதிர்காமு, ஜக்கையன் உள்ளிட்டோர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பகிரங்க சவால்

பகிரங்க சவால்

சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏவான வெற்றிவேல், சசிகலா குடும்பத்தினர் இன்றி ஆட்சியை நடத்த முடியுமா என பகிரங்கமாக சவால் விட்டுள்ளார்.

ஜெயக்குமாருக்கு போட்ட பிச்சை

ஜெயக்குமாருக்கு போட்ட பிச்சை

ஜெயக்குமாருக்கு நிதியமைச்சர் பதவி கொடுத்தது தினகரன் போட்ட பிச்சை என்றும் அவர் கூறினார். சேகர் ரெட்டியுடன் தொடர்புயவர்களே அச்சப்பட்டு ஓடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சேகர் ரெட்டியுடன் செய்த தவறு

சேகர் ரெட்டியுடன் செய்த தவறு

அமைச்சர்களில் சிலர் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து செய்த தவறுக்கு பயந்து என்ன நடக்குமோ என்ற பீதியில் தினகரனை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் உடன் கூட்டுசேர்ந்தே சில அமைச்சர்கள் தினகரனை ஒதுக்குவதாகவும் அவர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jayakumar's minister posting is given by TTV.Dinakaran says Dinakaran support MLA Vetrivel. And he challenged that without Sasikala family they can not run the govt.
Please Wait while comments are loading...