தாராபுரம் காவல்நிலையத்தில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மகளிர் நிலையத்தில் பெண் போலீஸ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் காயத்ரி. இவரை, உயர் அதிகாரி ஒருவர் திட்டிய காரணத்தால் மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

காவல் நிலையத்தில் விஷம் அருந்திய காயத்ரி, வாயில் நுரை தள்ளியவாறு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை தாராபுரம் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயரதிகாரி திட்டிய காரணத்தினாலேயே பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக காவல்நிலையத்தில் பெண் காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திருச்செங்கோடு காவல்நிலைய பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கும் உயரதிகாரி செய்த டார்ச்சரே காரணம் என்று கூறப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications