சேலத்தில் 'போலி' பெண் கலெக்டர் கைது
சேலம்: சேலம் அருகே போலியாக அடையாள அட்டை தயாரித்து வைத்துக்கொண்டு கலெக்டர் என்று கூறி மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இடைப்பாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பரமணியம் மகன் சீனிவாசன். 27. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் தந்தைக்கு வைத்தியம் பார்க்க, உடுமலைப்பேட்டைக்குச் சென்றார். அங்கு தங்கியிருந்த சீனிவாசன், அப்பகுதியை சேர்ந்த அருணாதேவி, 26, என்பவரை சந்தித்தார். பின்னர், இருவரும் காதலித்து வந்தனர். அதையடுத்து, திருமணம் செய்து கொண்டு, இடைப்பாடிக்கு வந்தனர்.
அருணாதேவி, தான், சென்னை மாவட்டத்தில், பயிற்சி கலெக்டராக பணியாற்றி வருவதாக கூறிவந்தார். தன் உறவினர்களிடம் கடன் வாங்கிய அருணாதேவி, பயிற்சி கலெக்டரின் சம்பளம் என மாதம், 50 ஆயிரம் ரூபாயை, தன் கணவர் சீனிவாசனிடம் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த கதிரவன் (27) என்பவருக்கும் நடைபாதை தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் சீனிவாசன் மற்றும் உறவினர்கள் சிலர், சென்னையில் அருணாதேவி கலெக்டராக பணிபுரிந்து வருவதாகவும், இதனால் அவரிடம் சொன்னால் போலீசில் வழக்குப்பதிந்து கைது செய்து விடுவதாகக்கூறி கதிரவனை தாக்கியதோடு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த கதிரவன், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கதிரவனால் தாக்கப்பட்டதாக, சீனிவாசன், 27, அவரது உறவினர்கள் செல்வம், சுப்பரமணி ஆகிய மூவரும், இடைப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக இடைப்பாடி போலீசில் கதிரவன் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பரமணியம், விசாரணை செய்து வந்தார். சீனிவாசன் மற்றும் அவரது மனைவி அருணாதேவி ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில், அரசு ஊழியர் அடையாள அட்டையை போலியாக தயாரித்து பொதுமக்களை ஏமாற்றி வந்ததும், அருணாதேவி சென்னையில் கலெக்டராக இருப்பதாக பொய்யான தகவலை பரப்பி பலரை ஏமாற்றி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அப்புசாமி கொடுத்த புகாரின்பேரில் இடைப்பாடி போலீசார் நேற்று இரவு வாலிபரை மிரட்டிய போலி கலெக்டர் அருணாதேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அருணாதேவியிடமிருந்து, முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டதாக வைத்திருந்த, போலி ஐ.ஏ.எஸ்., அடையாள அட்டையையும், பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அருணாதேவியிடம், சேலம் மாவட்ட எஸ்.பி., சக்திவேல், நேரடியாக விசாரணை செய்தார். பின்னர், சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications