எஸ்.வி சேகரை உடனடியாகக் கைது செய்யக்கோரி சென்னையில் மாதர் சங்கம் போராட்டம்
எஸ்.வி சேகரை உடனடியாகக் கைது செய்யக்கோரி மாதர் சங்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடந்தது.
சென்னை : பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பிய எஸ்.வி சேகரைக் கைது செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்ந்து இருந்தார். இதனால் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இடைக்கால முன் ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.
இதனால், போலீஸாரின் எஸ்.வி சேகரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில், எஸ்.வி சேகரைக் கைது செய்யக்கோரி சென்னை மயிலாப்பூரில் அனைத்து இந்திய மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு எஸ்.வி சேகருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். அப்போது சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. எஸ்.வி சேகரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறி இவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications