பள்ளிப் பாடத்திட்டத்தில் புதிய புதிய மாற்றங்கள்.. யோகா கட்டாயம்… செங்கோட்டையன் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிப் பாடத்திட்டத்தில் யோகா மற்றும் உடற்கல்வியை கட்டாய பாடமாக சேர்க்க உள்ளதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பள்ளிகளில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன என்றும் அதில் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் பாடத்தில் சேர்க்கப்பட உள்ளன என்றும் கூறியுள்ளார்.

Yoga in State school syllabus, says Sengottaiyan

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான நூல்கள் வாங்க மாவட்ட நூலகங்களுக்கு 2.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய செங்கோட்டையன், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவித்த அமைச்சர், மாணவர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
State education minister Sengottaiyan said that the Yoga will be added in syllabus.
Please Wait while comments are loading...