கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவில் வந்து இறங்கிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
Recommended Video

தஞ்சை: கும்பகோணத்தில் நள்ளிரவு ரயிலில் தனியாக வந்திறங்கிய இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்கு மூலம் பெறப்பட்டது.
வட மாநிலம் ஒன்றை சேர்ந்த, சுமார் 23 வயது மதிக்கப்பட்ட இளம் பெண், கடந்த 2ம் தேதி இரவு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் கும்பகோணம் வந்துள்ளார்.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12 மணியளவில் இறங்கிய அந்த பெண் தங்கும் விடுதிக்கு செல்வதற்காக அங்கிருந்த ஆட்டோவை அழைத்துள்ளார்.

ஆட்டோ
ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துக் கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டு சென்றதாகவும், அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளில் இருவர் பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் வைத்து பார்த்து,
ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று அந்த பெண் முடிவுக்கு வந்துள்ளார்.

பாலியல் தொல்லை
எனவே அச்சத்தால் அந்த பெண் ஆட்டோவிலிருந்து குதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இளம்பெண்னுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.

போலீசில் புகார்
அவர்களின் பிடியிலிருந்து தப்பிய இளம்பெண் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .இன்று காலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். தினேஷ், வசந்த், புருஷோத், அன்பரசன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கும்பகோணம் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி ரகசிய வாக்குமூலம் பெற்றார். அவருக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கும்பகோணம் வங்கி
இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராவதில்லை என்று கும்பகோணம் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் அலுவலராக பயிற்சி பெற வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications