பாபநாசம் அருகே பலத்த காற்றால் மரம் விழுந்து பள்ளி மாணவி மரணம்! பதறிப்போன தொகுதி MLA ஜவாஹிருல்லா!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பலத்த காற்றால் மரம் விழுந்து பள்ளி மாணவி மரணம் அடைந்துள்ள நிலையில் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில்-1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவி செல்வி சுஷ்மிதா (வயது 15) நேற்று (29-8-2023) மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையில் பள்ளியின் அருகிலுள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்

மேலும் இவ்விபத்தில் மற்றொரு மாணவி ராஜேஸ்வரி படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இவ்விபத்தில் இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதற்கும் காயமடைந்த மாணவிக்கு ரூ 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதற்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களது மகள் சுஷ்மிதாவை இழந்து நிற்கும் அவரது பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள், ஊர் மக்கள், உடன் படித்த மாணவியர், அவரது ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவி இராஜேஸ்வரி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications