Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பிரியாணி.. அதிராம்பட்டினத்தில் 80 ஆண்டாக நடக்கும் புகாரி நிகழ்வு!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: அதிராம்பட்டினத்தில் கடந்த 40 நாட்களாக ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் வகையில் நடைபெற்ற புகாரி ஷரீப் நிகழ்வு நிறைவடைந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சுதந்திரத்துக்கு முன் காலரா நோய் வேகமாக பரவியது. காலரா நோயால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்தனர். இதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரார்த்தனை செய்வதற்காக அதிராம்பட்டினத்தில் கடந்த 1942 ஆம் ஆண்டும் புகாரி ஷரீப் என்ற நிகழ்ச்சி தொடங்கியது. இதன் காரணமாக காலராவின் தாக்கம் குறைந்ததாக அப்பகுதி மக்களால் நம்பப்பட்டு வருகிறது.

40 நாட்கள்

40 நாட்கள்

இதன் காரணமாக இஸ்லாமிய மாதமான துல்ஹஜ்ஜில் தொடங்கி முஹர்ரம் வரை 40 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் நபிகள் நாயகத்தின் ஹதீஸ் எனப்படும் நன்மொழிகளின் தொகுப்புகளில் முதன்மையானதாக கருதப்படும் புகாரி ஷரீப் ஓதப்படும். அதன் தொடர்ச்சியாக தமிழில் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரம் செய்யப்படும். இதன் தொடர்ச்சியாக துஆ ஓதப்பட்டு உணவு பொட்டலங்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.

 புகாரி ஷரீப் நிகழ்வு

புகாரி ஷரீப் நிகழ்வு

40 நாட்களும் பிரியாணி அல்லது நெய் சோறு கொண்ட இந்த பிரியாணி பொட்டலம் வழங்கும் நிகழ்வில் தினசரி சுமார் 2,500க்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்று வந்த புகாரி ஷரீப் நிகழ்வு இன்றுடன் நிறைவடைந்தது.

 கடைசி நாள்

கடைசி நாள்

இன்று காலை 6 மணிக்கு திக்ரு நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்வு புஹாரி ஷரீஃப் ஓதி நிறைவு செய்த பிறகு, மார்க்க பரப்புரை செய்யப்பட்டது. கடைசி நாளான இன்றைய நிகழ்வில் ஆண்கள், பெண்கள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நாளொன்றுக்கு சுமார் 1,500 உணவு பொட்டலங்களும், வெள்ளிக்கிழமைகளில் கூடுதலாக 100 உணவு பொட்டலங்களும், கடைசி நாளான இன்று 6,000 உணவு பொட்டலங்களும் தயாரிக்கப்பட்டன.

ஒரு லட்சம் பேர்

ஒரு லட்சம் பேர்

40 நாட்களில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இதன் மூலம் உணவு கிடைக்கிறது. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இதன் மூலமாக 40 நாட்கள் உணவு கிடைக்கிறது. பல வீடுகளில் காலை அல்லது மதிய உணவாக இது இருக்கிறது. இந்த நிகழ்வில் வழங்கப்படும் உணவு பொட்டலங்கள் தயாரிப்பு செலவுக்கு, அதிராம்பட்டனத்தை சுற்றி வசித்து வரும் செல்வந்தர்கள் உதவி வருகிறார்கள்.

தொடரும் நிகழ்வு

தொடரும் நிகழ்வு

ஒவ்வொரு நாளும் ஒருவர் என, 40 நாட்களும் ஏராளமானோர் உணவு வழங்க உதவி உள்ளனர். இதன் மூலம் கடந்த 40 நாட்களும் ஏழை, எளிய மக்கள் உணவு பற்றிய கவலையின்றி பசியாற சாப்பிட்டு வந்துள்ளனர். அதிராம்பட்டினத்தின் கலாச்சாரங்களில் ஒன்றாக திகழும் இந்த நிகழ்வு, முத்துப்பேட்டை போன்ற சில ஊர்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+