Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓடவும் கூடாது.. ஒளியவும் கூடாது! என்ன பண்ணனும் தெரியுமா? ராஜேந்திர பாலாஜிக்கு டிடிவி தினகரன் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: ஆவினில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது கூடாது எனவும், முறைப்படி வழக்கை சந்திக்க வேண்டும் அதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு என அமமுக பொதுச்செயலாலர் டிடிவி.தினகரன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

Recommended Video

    ஓடவும் கூடாது.. ஒளியவும் கூடாது! என்ன பண்ணனும் தெரியுமா? ராஜேந்திர பாலாஜிக்கு டிடிவி தினகரன் அட்வைஸ்

    அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரபாலாஜி, கடந்த ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் 3 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக பல்வேறு காவல்நிலையங்களில் அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் , முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். அவரை கைது செய்ய சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கைது செய்யும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அவர் டெல்லியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அங்கு தனிப்படையினர் டெல்லி விரைந்துள்ளனர்.

     டிடிவி தினகரன் பேட்டி

    டிடிவி தினகரன் பேட்டி

    இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது கூடாது எனவும், முறைப்படி வழக்கை சந்திக்க வேண்டும் அதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு என அமமுக பொதுச்செயலாலர் டிடிவி.தினகரன் அட்வைஸ் கொடுத்துள்ளார். தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இலக்கை அடையும் வரை நாங்கள் துவண்டு போக மாட்டோம் எனவும், தேர்தல் வெற்றி தோல்விகளால் நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைத்தால் அது அவர்களது தவறு என்றதோடு நாங்கள் ஒரு சமூகப் பொறுப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.

     உயிரை காப்பாற்ற வேண்டும்

    உயிரை காப்பாற்ற வேண்டும்

    அரசியலுக்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இல்லை எனக் கூறிய டிடிவி தினகரன், பரவலை தடுப்பதற்காக அறிவுரை வழங்க வேண்டிய தமிழக முதல்வரே தஞ்சை, திருச்சி போன்ற இடங்களில் பொதுக்கூட்டங்களில் நாலாயிரம் ஐயாயிரம் பேரைக் கூட்டி நிகழ்ச்சி நடத்துகிறார் எனவும், இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

     வெல்கம் மோடி எனும் திமுக

    வெல்கம் மோடி எனும் திமுக

    திமுக தொடர்ந்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் சென்று தடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்த டிடிவி தினகரன், மேலும் மக்களுடைய மறதிதான் திமுகவின் மூலதனம் எனவும், எதையெல்லாம் ஆறு மாதத்திற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்தார்களோ, அதை எல்லாம் தற்போது ஆதரிக்கிறார்கள் எனவும், தற்போது வெல்கம் மோடி என்பது ட்ரெண்டாகி கொண்டுள்ளது எனவும், ஸ்டாலினின் விடியல் அரசாங்கம் சாயம் வெளுத்துவிட்டது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

     ராஜேந்திரபாலாஜி அறிவுரை

    ராஜேந்திரபாலாஜி அறிவுரை

    ஆவினில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது கூடாது என்ற டிடிவி தினகரன், தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முறைப்படியாக நீதிமன்றத்தின் மூலமாக சந்திக்க வேண்டும் எனவும், நேர்மையாக வழக்கை சந்திப்பதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு எனவும் அமமுக பொதுச்செயலாலர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+