தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்.. அண்ணாமலை சொல்கிறார்
தஞ்சாவூர்: தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி, சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இவர் தங்கியிருந்த விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக அந்த மாணவி தனது மரணப்படுக்கையில் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல்
வார்டன் சகாயமேரியை (62) ஏற்கனவே போலீஸார் கைது செய்தனர். மாணவியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாணவியின் சொந்த ஊரான வடுகபாளையத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , பாஜக தேசிய மகளிர் அணித்தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் மாணவியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

நீதி கிடைக்க வேண்டும்
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும் என்று கூறினார். இந்த போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரான போராட்டமும் இல்லை என்று கூறிய அவர் மாணவியின் குடும்பத்திற்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம் என தெரிவித்தார்.

சிபிஐ விசாரணை வேண்டும்
பா.ஜ., குழு நாளை மறுநாள் அரியலூர் வர உள்ளது என்று கூறிய அவர் இதில் மனிதர்கள் தவறு செய்துள்ளனர். இதற்குதன் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என கூறினார். ஆட்சியாளர்கள் பொறுப்பில் இருப்பவர்கள், பொறுப்பில்லாமல் பேசுவது நீதி கிடைக்குமா? என்றும் அண்ணாமலை சந்தேகம் எழுப்பினார்.

பொய் சொல்ல வாய்ப்பில்லை
மாணவியின் வீடியோவை அடிப்படையாக வைத்து பாஜக தன்னுடைய குரலை கொடுத்து வருகின்றது. வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து போராடி வருகிறோம் என்று தெரிவித்த அவர்
இறக்கும் தருவாயில் எந்த ஒரு குழந்தையும் பொய் சொல்ல வாய்ப்பில்லை ஒரு மதத்தை சேர்ந்த 2 மனிதர்கள் செய்த தவறு தான் என்றார்.

அரசு மோசமாக கையாண்டுள்ளது
தமிழக அரசு இதனை மோசமாக கையாண்டுள்ளது. இதில் புலனாய்வு துறை தவறான அறிக்கையை முதல்வருக்கு தெரிவித்துள்ளனர் என்று குற்றம்சாட்டிய அண்ணாமலை அற்புதமான காவல் துறைக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.
-
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்!












Click it and Unblock the Notifications