தயவு செய்து அழாதீங்க.. இதை வாங்கிக்குங்க.. சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கு இயக்குநர்கள் ஆறுதல்
விவசாயி சுந்தர்ராஜன் குடும்பத்துக்கு இயக்குனர்கள் நிதியுதவி அளித்தார்கள்.
Recommended Video

தஞ்சை: "அழாதீங்க.. தயவு செய்து அழாதீங்க.. இதை வாங்கிக்குங்க" என்று சொல்லி தற்கொலை செய்து கொண்ட விவசாயி சுந்தரராஜன் குடும்பத்திற்கு நிவாரண உதவி அளித்து வருகிறார்கள் தமிழ் பட இயக்குநர்கள்.
புயல் போய் ஒரு வாரம் ஆன நிலையில், சினிமா டைரக்டர்கள் டெல்டா பக்கம் போய் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லியும், இயன்ற நிதி உதவிகளை அளித்தும் வருகிறார்கள்.
இதற்காக சென்னையில் இருந்து தஞ்சைக்கு பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சென்றது.

இயக்குனர்கள்
இந்த டைரக்டர்கள் குழுவில், வெற்றிமாறன், அமீர், தங்கம், திருமுருகன், தங்கசாமி, பாலமுரளிவர்மன், சுரேஷ் என பலரும் சென்றனர்.

ஆறுதல் சொன்னார்கள்
புயல் பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்ட டைரக்டர்கள், உடைமைகளை இழந்தோரையும் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். பின்னர், ஒரத்தநாடு பகுதியில் தென்னை வீழ்ந்து போனதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சுந்தர்ராஜனின் குடும்பத்தினரையும் இந்த குழு நேரில் சென்று சந்தித்தது.

எங்களால முடிஞ்சது...
இயக்குனர்களை பார்த்தும் அந்த குடும்பத்தினர் மனம் வெடித்து அழுதார்கள். அப்போது சுந்தர்ராஜன் மனைவியிடம் டைரக்டர் வெற்றிமாறன், "தயவு செய்து அழாதீங்க.. இந்த உதவியை வாங்கிக்குங்க.. எங்களால முடிஞ்சது" என்று சொல்லி 50 ஆயிரம் ரூபாய் நிதி தந்தார்கள்.

கூட்டாக வேண்டுகோள்
இந்த குடும்பத்துக்கு மற்றவர்களும் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று டைரக்டர்கள் எல்லோரும் கூட்டாக வேண்டுகோளும் வைத்தார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications