என்னை மன்னிச்சுடுங்க! கணவனை விட்டுப் பறந்த பச்சைக்கிளி! போனை போட்டு ’ஸ்கெட்ச்’! தடதடத்த தஞ்சாவூர்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் கணவனை விட்டு கள்ளக்காதலுடன் சென்ற இளம் பெண் மீண்டும் கணவனுக்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியபோது, கள்ளக்காதலன் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

தமிழகத்தில் முறையற்ற உறவு காரணமாக நடக்கும் குற்ற சம்பவங்கள் ஒருபுறம் அதிகரித்து வருவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கள்ளக்காதலுக்காக கணவன் அல்லது மனைவியை கொலை செய்வதும் குடும்பத்தினரை விட்டு பிரிந்து செல்வதுமான சம்பவங்கள் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கும் கொடூர கொலை சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த முறை கணவனோடு சேர்ந்து இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலனை கொலை செய்திருக்கிறார்.

முறையற்ற உறவு

முறையற்ற உறவு

கணவரின் நண்பரோடு ஏற்பட்ட முறையற்ற உறவு காரணமாக ஒரு உயிர் பறிபோன சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம். தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அப்பகுதியில் உள்ள கண்டியூரைச் சேர்ந்த அருண் என்கிற சத்தியசீலன் அப்பகுதியில் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு ஒளி ஒலி அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் நந்தினி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குடும்ப வாழ்க்கையில் குதுகலமாக சென்று கொண்டிருந்த இருவர் வாழ்க்கையில் வந்து சேர்ந்தார் பிரகாஷ்.

நண்பனின் மனைவி

நண்பனின் மனைவி

சத்தியசீலனின் நண்பரான பிரகாசம் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. திருவிழா காலங்களில் இருவரும் சேர்ந்து ஒலி ஒளி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். இதன் காரணமாக அடிக்கடி சத்தியசீலனின் வீட்டுக்கு பிரகாஷ் வந்து சென்றிருக்கிறார். அப்போது நந்தினிக்கும் பிரகாஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு செல்போனில் பேச தொடங்கிய இருவரும் பின்பு கள்ளக்காதலர்களாக மாறியுள்ளனர். சத்தியசீலன் வெளியூருக்கு செல்லும் போதெல்லாம் பிரகாஷை சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்திருக்கிறார் நந்தினி.

காதலனுடன் மாயம்

காதலனுடன் மாயம்

ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் குறித்து சத்தியசீலனுக்கு சந்தேகம் ஏற்பட பிரகாஷ் உடன் மாயமாகி இருக்கிறார் நந்தினி. பல இடங்களில் தேடியும் தனது மனைவி குறித்து தெரியாத நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் சத்தியசீலன். இந்நிலையில் பிரகாசம் நந்தினியும் சுவாமிமலை அருகே அஸ்வந்திபுரம் என்ற கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு கணவன் மனைவி போலவே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இருவரது வாழ்க்கையில் மீண்டும் புயல் வீசத் தொடங்கி இருக்கிறது.

மீண்டும் தொடர்பு

மீண்டும் தொடர்பு

ஒரு மாதத்திலேயே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினி தனது கணவர் சத்தியசீலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருக்கிறார்." நான் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டு உங்கள் நண்பனுடன் வந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்த தவறு இப்போதுதான் எனக்கு தெரிகிறது. எனவே என்னை மன்னித்து மீண்டும் உங்களிடம் சேர்த்துக் கொள்ளுங்கள் என கெஞ்சியதோடு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார். இதனையடுத்து நந்தினி கூறிய அந்த குறிப்பிட்ட கிராமத்திற்கு சென்ற சத்தியசீலன் மனைவி தங்கி இருந்த வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

கொடூர கொலை

கொடூர கொலை

வீட்டின் கதவை தட்டிய போது பிரகாஷ் திறந்தார். அப்போது தனது மனைவி அழைத்துச் சென்ற பிரகாஷ் மீது ஆத்திரத்தில் இருந்த சத்தியசீலன் பிரகாசி கத்தியால் குத்தி இருக்கிறார். இதனால் பிரகாஷ் ஓட முயற்சித்த போது வீட்டில் இருந்த நந்தினி பிரகாஷின் கைகளை பின்புறமாக பிடித்துக் கொண்டார் அப்போது சத்தியசீலன் பிரகாஷ் உடலில் பல இடங்களில் கத்தியால் சாரமாறியாக குத்திய நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சத்தியசீலன் அவரது மனைவி நந்தினி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+