’பங்காளி’ ஜெயக்குமார்.. ’பாச’ தம்பி! ஒரே நாளில் ரூட் மாறிய டிடிவி! ஆனால் ஸ்கெட்ச் மட்டும் அவருக்கு?
தஞ்சாவூர் : பழைய மன கசப்புகளை மறந்து நண்பர்களாக பங்காளிகளாக இணைந்து செயல்பட வேண்டும். எனவும், ஒ.பன்னீர்செல்வம் அனைவரும் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை. அவரவர் அவரவராகவே இருந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என கூறியுள்ளதாக அம்மா முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"8 வழிச்சாலை எந்த வகையில் வந்தாலும் அந்த பகுதி மக்களுக்கு ஆதரவு தருவோம். பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தினால் மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும்.
மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டக்கூடாது, அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதால் தமிழக அரசும், மத்திய அரசும் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.

பாஜக அண்ணாமலை
பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ரொம்ப நாளாக இருக்கும் மொய்விருந்து நிகழ்ச்சியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார் அவர் சொல்வது தவறு. வட்டியில்லாத கடன் தருவது, ஒருவரை கைத் தூக்கிவிடுவது கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அவருக்கு எதுவும் தெரியாது.

பங்காளிகளாக..
ஜெயக்குமார் விமர்சனம் குறித்து எழுப்பிய கேள்விக்கு," பழைய மன கசப்புகளை மறந்து நண்பர்களாக பங்காளிகளாக இணைந்து செயல்பட வேண்டும். ஒ.பன்னீர்செல்வம் அனைவரும் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை. அவரவர் அவரவராகவே இருந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என்பது தான் ஒரே கட்சியில் சேரவேண்டிய அவசியமில்லை" என பேசினார்.

டிவிட்டர் பதிவு
இந்நிலையில் டிடிவி தினகரனின் டிவிட்டர் பதிவும் அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதில்,'கடந்த கால கசப்புணர்வா?அல்லது புரட்சித்தலைவரும் நம் அம்மா அவர்களும் நமக்கு புகட்டிய லட்சிய உணர்வா?
எதைப்பற்றி இப்போது சிந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்.
மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணியைத்தான் யோசிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

அண்ணன் டிடிவி
மற்றொரு பதிவில்,"இதனை உணர்ந்து செயல்பட்டால் நல்லது என்பதை,அண்ணன் TTV என்று பழைய பாசத்தோடு சொல்லும் தம்பிக்கு தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். நேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதை வைத்தே தினகரன் இப்படி பதிவிட்டிருக்கிறார் எனவும், ஆனால் 'மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை' என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications