அடேங்கப்பா..! பேராவூரணியில் 22 செ.மீ. மழை.. கொட்டித் தீர்த்த மழையால் மூழ்கிய பயிர்கள்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருபத்தி இரண்டு சென்டிமீட்டர் வரை கொட்டி தீர்த்த கன மழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக அறுவடைக்கு 15 நாட்களில் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் கனமழையால் வயலில் சாய்ந்து மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் கனமழை
இந்த கனமழையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பிலான சம்பா தாளடி பயிர்கள் சேதமடைந்துள்ளன இது மட்டுமல்லாது திருவாரூர் நாகை மயிலாடுதுறை சீர்காழி கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்த நெற்பயிர்கள் நிலக்கடலை உளுந்து உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.

நெற்பயிர்கள் சேதம்
நாகை மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் வயலில் உள்ள நிலையில் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உப்பள தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கூடுதல் செலவு
கடந்த சில நாட்களாக தொடர் மழையால் சம்பா தாளடி இளம் நாற்றுகள் பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் வெயில் அடித்ததால் விவசாயிகள் உரம் தெளித்தும் பூச்சிமருந்து கொடுத்தும் பயிர்களை காப்பாற்றி வந்த நிலையில் இந்த மழையால் பெரும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது எனவும் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் பூச்சிமருந்து உள்ளிட்டவற்றுக்கு கூடுதலாக ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவு ஆனதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

நிவாரணம் வழங்க கோரிக்கை
தற்போது பெய்த கனமழை காரணமாக விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு அதிகாரிகளைக் கொண்டு உரிய ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications