விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்! விரைவில் வெளியே வருவார்! பழ நெடுமாறன்
தஞ்சாவூர்: விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் உரிய நேரத்தில் வெளியே வருவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26ஆம் தேதி இந்தியாவிலேயே மொழிக்காக நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமான தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக பொறுப்பேற்ற வ.அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பது குறித்து ஓராண்டு கழித்துதான் கருத்து கூற முடியும். முதல்வரின் காலை உணவு திட்டம் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றியதை வரவேற்கிறோம்.
நான் சினிமா பார்ப்பதில்லை என்பதால் ஜனநாயகன் படம் குறித்து கருத்து கூற முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார்.
இதை நான் 2009ஆம் ஆண்டு முதலே கூறி வருகிறேன். உரிய நேரத்தில் அவர் வெளியே வருவார். தற்போது அவர் வெளியே வருவதற்கான சர்வதேச சூழல் இல்லை. பிரபாகரனின் மகள் ஏற்கெனவே தொலைக்காட்சியில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications
