கைவிட்ட மகன்கள்..! வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட மூதாட்டி! மண்ணை உண்டு வாழ்ந்த கண்ணீர் காட்சிகள்
தஞ்சாவூர் : அரசு வேலையில் இருக்கும் இரண்டு மகன்கள் கைவிட்ட நிலையில் தனிமைச் சிறையில் அடைத்து வைத்த நிலையில், மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி குறித்த சமூக வளைதளங்களில் காட்சிகள் வெளியானதையடுத்து பூட்டை உடைத்து மூதாட்டியை காவல்துறையினர் மிட்டனர்.
Recommended Video
தஞ்சாவூர் அருகே காவிரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், எலும்பும் தோலுமாக ஆடையின்றி ஒரு மூதாட்டி மண்ணை உண்பது போல் காட்சிகள் சமூகவளைதலங்களில் வேகமாக பரவியது.
மேலும் இந்த காட்சி குறித்து 1098 உதவி மையத்திற்கு சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த சமூக நலத்துறையினர், அப்பகுதியில் விசாரித்தனர்.

கைவிடப்பட்ட மூதாட்டி
விசாரணையில்அந்த மூதாட்டி பெயர் ஞானஜோதி (62) என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், திருமணமாகி அவருக்கு மூன்று குழந்தைகள் என தெரியவந்துள்ளது. மூத்தமகன் சென்னையில் காவல் ஆய்வாளராகவும், இளைய மகன் அரசு தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கணவரும், தனது மகளும் கடந்த சில 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ஞானஜோதியை இரண்டு மகன்களும் கவனிக்காமல் கைவிட்டுள்ளனர்.

சொத்து பிரச்சினை
சொத்து பிரச்சினை காரணமாக தனிதனியே வசிக்கும் மகன்கள், மனநலம் பாதிக்கப்பட்ட தாயை வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர். இது குறித்து அருகில் இருப்பவர்கள் கூறுகையில், கடந்த 10 வருடமாக மூதாட்டியின் நிலை இப்படி தான் உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை அவரது மகன்கள் வந்து பிஸ்கட் வாங்கி கேட் வழியாக தூக்கி வீசி விட்டு போவார்கள். இது குறித்து கேட்டால் எங்களிடம் சண்டைக்கு வருவார்கள் என தெரிவிக்கின்றனர்.

மண்ணை சாப்பிட்ட மூதாட்டி
இப்பகுதி மக்கள் அவ்போது உணவு வழங்கி வந்துள்ளனர். தண்ணீர், உணவு என எதுவும் இல்லாமல் மண்ணை உண்டும் வந்துள்ளார் மூதாட்டி. இந்த காட்சிகள் சமூக வளைதலத்தில் பரவியதையடுத்து உடனடியாக அந்த மூதாட்டியை மீட்டு முதலுதவி வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் அந்த இரண்டு மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மூதாட்டி மீட்பு
இதனையடுத்து காவல்துறை உதவியுடன் வந்த சமூக நலத்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து மூதாட்டியை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு வந்த மூத்த மகன் சொத்தையும், பென்சன் பணம் 30,000 ரூபாயும் தம்பி எடுத்து கொண்டதாகவும் வேதனை தெரிவித்தாரே தவிர தனது தாயை பற்றி அவர் கொஞ்சம் கவலைப்படவில்லை என்பது வேதனையின் உச்சம்.












Click it and Unblock the Notifications