இருந்த ஒரே ஒரு பேரூராட்சியும் ‘அவுட்’.. டெல்டாவில் ஆட்டம் காட்டும் எடப்பாடி.. கலங்கும் தினகரன்!
தஞ்சாவூர் : டிடிவி தினகரனின் அமமுகவுக்கு என தமிழ்நாட்டில் இருந்த ஒரே ஒரு பேரூராட்சி தலைவரான ஒரத்தநாடு மா.சேகர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒரத்தநாடு பேரூராட்சி சேர்மன் சேகர் அதிமுகவுக்கு 'ஜம்ப்' ஆக உள்ளதாக தகவல் கசிந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொந்தத் தொகுதி ஒரத்தநாடு. அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் இருந்து வருகிறார் வைத்திலிங்கம். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அமமுக வேட்பாளர்கள் 9 வார்டுகளிலும், திமுக, அதிமுக வேட்பாளர்கள் தலா மூன்று வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

ஒரத்தநாடு பேரூராட்சியில் அமமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் 8-வது வார்டிலும், அவரது மனைவி திருமங்கை சேகர் 11-வது வார்டிலும் போட்டியிட்ட நிலையில் இருவருமே வெற்றி பெற்றனர். மொத்தம் 9 வார்டுகளில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் பதவியை அமமுகவின் மா.சேகர் கைப்பற்றினார்.
டெல்டா அரசியல் : தஞ்சை மாவட்டத்தில் ஒருபக்கம் ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம், இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி அணியின் காமராஜ் என அரசியல் செய்து வந்த நிலையில், அவர்களுக்கு கடுமையாக டஃப் கொடுத்து வந்தார் மா.செகர். டிடிவி தினகரன் டெல்டா மாவட்டங்களுக்குப் பயணிக்கும்போதெல்லாம், ஆதரவாளர்களைத் திரட்டி அமர்க்களப்படுத்துவார் சேகர்.

இந்நிலையில், அவர் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
அமமுகவில் இருந்து நீக்கம் : இதனைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக, M.ரெங்கசாமி இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தஞ்சை தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் எம்.சேகர் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அமமுகவுக்கு இருந்த ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications