ஃபுட் அலர்ஜி! டிடிவி தினகரன் உடல்நிலை சீராக உள்ளது! தஞ்சை மீனாட்சி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!
தஞ்சை: உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக உள்ளது என தஞ்சை மீனாட்சி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமமுக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்பியுமான டிடிவி தினகரன் இன்று காலை திடீர் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூரில் உள்ள மினாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்கானிப்பில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

டிடிவி தினகரன்
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே தான் நாலமாக இருப்பதாக டிடிவி தினகரன் கூறினார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

மருத்துவப் பரிசோதனை
மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என கூறியிருந்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

உணவு ஒவ்வாமை
இந்நிலையில் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக உள்ளது என தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மீனாட்சி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு டிடிவி தினகரன் நேற்று வயிற்றுவலி, வாந்தி, நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் அனுமதிக்கப்பட்டார்.

நீராக உள்ளது
தேவையான பரிசோதனைகள் முடிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அவரது உடல் நிலை சீராக உள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார். அத்துடன் அவரது உடல்நிலை மருத்துவ குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டிடிவி தினகரனை சந்திக்க தொண்டர்கள் மருத்துவவமனையில் குவிந்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications