தஞ்சை மேயர் யார்? திமுக வேட்பாளர் லிஸ்டில் இடம்பெற்றுள்ள அந்த 2 பேர்! உள்ளாட்சித் தேர்தல் விறு விறு!
தஞ்சை: தஞ்சை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ள நிலையில், இப்போதே யார் மேயர் என்பது குறித்த விவாதமும் தொடங்கிவிட்டது.
திமுக வெற்றி பெறும்பட்சத்தில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் மேயர் பதவியிலும் மருத்துவரணி நிர்வாகி டாக்டர் அஞ்சுகம் பூபதி துணை மேயர் பதவியிலும் அமர்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இருப்பது கவனிக்கத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திமுகவில் நேற்று இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டன. அந்த வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களை வைத்தே யார் மேயராக வரப் போகிறார்கள், யார் நகர்மன்றத் தலைவர்களாக வரப் போகிறார்கள் என்பதை ஓரளவுக்கு யூகித்துக் கொள்கிறார்கள் அந்தந்த பகுதியை சேர்ந்த திமுகவினர்.

மேயர் யார்?
அந்த வகையில் தஞ்சை மாநகராட்சி தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் சண்.ராமநாதன் மேயர் பதவிக்கான ரேஸில் முந்துகிறார். தஞ்சாவூரில் திமுக அதிக இடங்களை வெல்லும்பட்சத்தில் திமுக இளைஞரணி கோட்டாவில் உதயநிதி ஸ்டாலினின் விருப்பப்படி சண்.ராமநாதன் மேயர் பதவியில் அமர்வார் எனக் கூறுகிறார்கள் உள்விவரமறிந்தவர்கள்.

அஞ்சுகம் பூபதி
இதேபோல் டாக்டர் அஞ்சுகம் பூபதியும் மேயர் பதவிக்கு தகுதிவாய்ந்த வேட்பாளர் என்கிற போதும் தஞ்சை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாததால் அவருக்கு வாய்ப்பு குறைவு எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் அஞ்சுகம் பூபதி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வார்டு கவுன்சிலராக வெற்றிபெற்றால் தஞ்சை துணை மேயராகும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

தஞ்சை மாவட்டம்
தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்தல் பணிகளை கவனிப்பதால், அங்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் விறு விறுப்படைந்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 100% வெற்றி என்ற இலக்குடன் பணியாற்றி வரும் அமைச்சர் அன்பில் மகேஷ், நாளொன்றுக்கு பல மணி நேரங்கள் மாவட்டத்தின் பட்டிதொட்டியெங்கும் பயணித்து நிர்வாகிகளை வேலை வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications