கிளாஸ்ரூமில் மது குடிக்கும் மாணவிகள்! திமுகவால் சமுதாய சீரழிவு! தேனியில் கொந்தளித்த ஓ.பன்னீர்செல்வம்
தேனி : திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வகுப்பறையிலேயே மாணவ மாணவிகள் மது அருந்தும் அளவுக்கு சமுதாய சீரழிவு ஏற்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவ மாணவிகள் குளிர்பானத்தில் மது கலந்து குடிக்கும் காட்சிகள் வெளியான நிலையில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

திமுக ஆட்சி
இந்நிலையில் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வகுப்பறையிலேயே மாணவ மாணவிகள் மது அருந்தும் அளவுக்கு சமுதாய சீரழிவு ஏற்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே தனது பண்ணை இல்லத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

ஓ.பன்னீர் செல்வம்
ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே பேசிய அவர், அதிமுக அரசு கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை அளிக்கும் நோக்கில் திமுக செயல்பட்டு வருவதாகவும், அதிமுக ஆட்சிக் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்டு வந்த 2,500 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை நிறுத்தியதைப் போல தற்போது அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தையும் நிறுத்தி உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

திட்டங்கள் முடக்கம்
அதிமுக ஆட்சியில் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு முடக்கி வருவதாக குற்றம் சாட்டி அவர் உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை அறிவித்து மக்களை திமுக அரசு அதிர்ச்சிக்குள்ளாக்கியது எனக் கூறினார். தற்போதைய சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அதிமுக மற்றும் திமுக தலைமையிலான அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர் எனக் கூறிய அவர் இது குறித்து சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் போதெல்லாம் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் பல்வேறு காரணங்களை கூறி தவிர்த்து வருகிறார்.

சமுதாய சீரழிவு
ஆனால் சொத்து வரி விதிப்பை திரும்பப் பெறும்வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். திமுக தலைமையிலான ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தமிழகத்தில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது வகுப்பறையில் அமர்ந்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் மது குடிக்கும் அளவுக்கு தமிழகத்தில் சமுதாய சீரழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் திமுக தலைமையிலான அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை" என கடுமையான விமர்சனங்களை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் முன்வைத்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications