தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

தேனி: வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று பாஜக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் டிடிவி தினகரனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தற்போது வெளியாகி உள்ளது. அதனை பார்ப்போம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இந்த முறை லோக்சபா தேர்தலில் இணைந்துள்ளார்.. தேனி தொகுதியில் அமமுக வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Do you know the property value of TTV Dhinakaran who is contesting in Theni constituency

முன்னதாக டிடிவி தினகரன், தேனி அருகே அன்னஞ்சி பகுதியில் இருந்து தனது கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தார். பின்னர் கலெக்டர் ஷஜீவனாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, ப.ரவீந்திரநாத் எம்.பியும் உடனிருந்தார்.

டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவதற்கு முன்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டே இருந்த ஓபிஎஸ், சுமார் அரை மணி நேரம் அவர் காத்திருந்த நிலையில், தினகரன் வந்தவுடன் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், தினகரன் மனு தாக்கல் செய்வதற்கு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது அவருடன் ஓபிஎஸ் போகவில்லை.. அவருடன் ஓபி ரவீந்திரநாத் மட்டும் சென்றார். வேட்பு மனு தாக்கல் வெற்றிகரமாக முடித்த டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்கள் படை சூழ அங்கிருந்து புறப்பட்டு சென்றார்..

இந்நிலையில் தேனி தொகுதியில் போட்டியிடம் டி.டி.வி.தினகரனின் சொத்து விவரங்கள் வேட்பு மனுவுடன் வெளியாகி உள்ளது. அதில், டிடிவி தினகரன் தனக்கு ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்து 973 மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளதாகவும், ரூ.57 லட்சத்து 44 ஆயிரத்து 8 மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக தனது சொத்து மதிப்பு ரூ.77 லட்சத்து 26 ஆயிரத்து 981 என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்..

மேலும் தனக்கு ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்து 29 மதிப்பில் கடன் உள்ளதாகவும் வேட்பு மனுவில் தினகரன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அயல்நாட்டு பணப் பரிமாற்ற ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ரூ.28 கோடி அபராத தொகையை மத்திய அரசுக்கு செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது மனைவி அனுராதா பெயரில் ரூ.1 கோடியே 69 லட்சத்து 25 ஆயிரத்து 118 மதிப்பில் அசையும் சொத்துகள், ரூ.2 கோடியே 48 லட்சத்து 79 ஆயிரத்து 707 மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளதாகவும் தினகரன் கூறியுள்ளார். மேலும் மனைவி பெயரில் ரூ.22 லட்சத்து 87 ஆயிரத்து 960 மதிப்பில் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+